மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருச்சியில் அதிர்ச்சி.. மர்மக்காய்ச்சலால் பலியான இளம்பெண்.. அடுத்தடுத்து பலிகள்., மக்களே உஷார்.!
திருவாரூர் மாவட்டத்தில் பயிற்சி பெண் மருத்துவர் மர்ம காய்ச்சலால் உயிரிழந்து இருக்கும் நிலையில் தற்போது திருச்சியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
தற்போது டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் படு வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில், திருச்சி மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் காரணமாக பல்வேறு மருத்துவமனைகளில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். திருச்சி திருவானைக்காவல் நரியன் தெருவில் வசிக்கும் கனகவல்லி என்ற 38 வயது பெண் மர்ம காய்ச்சலுக்கு தற்போது பலியாகி இருப்பது அப்பகுதி மக்களை வீதி அடைய வைத்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு கனகவல்லிக்கு காய்ச்சல் ஏற்பட்டு திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நேற்று இரவு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் கனகவல்லி அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், இன்று சிகிச்சை பலனில்லாமல் கனகவல்லி உயிரிழந்துள்ளார். அவருக்கு டெங்கு அறிகுறிகள் இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. அவருக்கு என்ன வகையான காய்ச்சல் என்பதே இன்னும் கண்டறியப்படவில்லை. இவ்வாறு மர்ம காய்ச்சலுக்கு இளம் பெண் பலியாகி இருக்கும் சம்பவம் திருச்சி சுற்றுவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.