மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காவல் நிலைய கழிவறையில் அரைஞாண் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்த கைதி; சி.பி.சி.ஐ.டி விசாரணை..!
காவல்நிலைய கைதி தற்கொலை செய்த விவகாரத்தில் விசாரணை சி.பி.சி.ஐ.டி வசம் மாற்றப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பக்தரிடம் செல்போன் திருடியதாக அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஓரியூரை சேர்ந்த முருகானந்தம் (வயது 37) என்பவர் சமயபுரம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். இவர் காவல் நிலைய கழிவறைக்கு சென்ற நிலையில், நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை.
இதனால் பணியில் இருந்த காவலர் கழிவறைக்கு சென்று பார்த்தபோது முருகானந்தம் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த காவலர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க, லால்குடி துணை காவல் கண்காணிப்பாளருக்கும் விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, காவல் நிலையத்திற்கு விரைந்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், முருகானந்தம் கழிவறையில் அரைஞாண் கயிறால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளாக மனைவி, குழந்தைகளை பிரிந்து வாழ்ந்து வரும் முருகானந்தம் மதுபோதைக்கு அடிமையாகி இருக்கிறார். அவர் கடந்த ஆண்டில் தாயை அடித்து கொலை செய்த வழக்கு அரியலூர் மாவட்டம் தூத்தூர் காவல் நிலையத்தில் நிலுவையில் இருக்கிறது என்பதும் அம்பலமானது. வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் வசம் மாற்றப்பட்டுள்ளது.