மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குடிப்பழக்கத்தால் மூழ்கிய குடி.. காதல் மனைவியை 3 ஆண்டுகளில் கொன்ற கணவன்.. திருச்சியில் அதிர்ச்சி.!
திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர், துவாக்குடி, ஐயப்பன் நகரில் வசித்து வருபவர் பிரவீன் குமார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, அப்பகுதியில் வசித்து வந்த வீரம்மாள் என்ற பெண்ணை பிரவீன் காதலித்து திருமணம் செய்துகொண்டார். காதல் ஜோடி வெவ்வேறு சமூகமாக இருந்தாலும், பெற்றோர் எதிர்ப்பை மீறி இணைந்தனர். தற்போது இவருக்கும் 7 மாதமாக கைக்குழந்தை இருக்கிறது.
இதனிடையே, திருமணத்திற்கு பின்னர் கூட சவகாசத்தால் மதுபோதைக்கு அடிமையான பிரவீன், தினமும் போதையில் வீட்டிற்கு வந்து காதல் மனைவியை அடித்து துன்புறுத்தி அனுதினத்தையும் நரகம் ஆக்கி இருக்கிறார். இதனிடையே, ஜூன் 26 அன்று தம்பதிகளுக்குள் தகராறு ஏற்பட்ட நிலையில், வீரம்மாளின் சகோதரர் வீட்டிற்கு வந்து பிரச்சனையை பேசி சரிசெய்து சென்றுள்ளார்.
இதையும் படிங்க: அடப்பாவமே... 5 மாத குழந்தையை அடித்தே கொன்ற தந்தை.!! விசாரணையில் வெளிவந்த உண்மை.!!
குடியால் பறிபோன குடி
இதனிடையே, மறுநாள் காலை நேரத்தில் மச்சானுக்கு தொடர்பு கொண்ட பிரவீன் குமார், உனது அக்காவுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி அழைப்பை துண்டித்து இருக்கிறார். இதனால் பதறிபோனவர் அக்காவின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அவர் மயங்கி படுக்கையில் இருந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றபோது மரணம் உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, பிரவீன் குமார் வீரம்மாளை கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்க, அவரை தேடியபோது தலைமறைவானது உறுதியானது. இதனால் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் வீரம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ப்ரவீனுக்கு வலைவீசப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: என் மாமன் பொண்ணு மேல ஆசையா?.. 21 வயது இளைஞரின் தலையை துண்டித்து கொன்ற ரௌடி.. விருதுநகரில் பயங்கரம்.!