மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குடிபோதையில் சண்டை.. சுண்டு விரலை கடித்ததால், அண்ணனை போட்டுத்தள்ளிய தம்பி.!!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாவாலி, வடக்கு தெருவில் வசித்து வருபவர் இலக்கன். இவரின் சகோதரர் அழகு முனீஸ்வரன். அண்ணன் - தம்பியான இருவரும் நேற்று வீட்டில் தனியாக இருந்துள்ளனர். இலக்கன் மதுபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், வீட்டில் தனியே இருந்த அண்ணன் - தம்பிக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறவே, ஆத்திரமடைந்த இலக்கன் தம்பி அழகுவின் சுண்டுவிரலை கடித்து இருக்கிறார். வலி தாங்க இயலாது ஆவேசத்தில் உச்சத்திற்கு சென்ற அழகு முனீஸ்வரன், மண்வெட்டியை எடுத்து அண்ணனை வெட்டியுள்ளார்.
இந்த சம்பவத்தால் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய இலக்கன் கதறவே, சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இலக்கன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரியவரவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இலக்கனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அழகுவை கைது செய்துள்ளனர்.