35 நாட்கள்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சுனிதா உருக்கமாக போட்ட முதல் போஸ்ட்.!
தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படுகிறது? அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் அனைத்து பள்ளிகளும், கல்லூரிகளும் கடந்த மார்ச் மாதம் முதலே மூடப்பட்டது. தமிழ் நாட்டில் தற்போது வரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்து வருவதால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றனர். இந்த ஆன்லைன் வகுப்பின் மூலம் அனைத்துத்தரப்பு மாணவர்களும் பயன்பெற முடியவில்லை.
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகளில் நூலகங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று பார்வையிட்டார். அதன்பிறகு, செய்தியாளர்களிடம் பேசுகையில், புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய பள்ளிக்கல்வித்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் விரைவில் வெளியிடுவார் என தெரிவித்தார்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. கல்வி கட்டணம் செலுத்த வற்புறுத்தும் பள்ளிகள் குறித்து பள்ளிக்கல்வித் துறைக்கு பெற்றோர்கள் தகவல் கொடுத்தால் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகள் திறப்பது குறித்து யோசிக்கும் நிலை இல்லை. இந்த மாதம் இறுதி வரை பள்ளிகள் மூடப்பட்டு தான் இருக்கும். அதன் பிறகு கொரோனா வைரஸின் தாக்கம் பொறுத்து முதலமைச்சர் முடிவு எடுப்பார் என தெரிவித்தார்.