மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன்... மின்சாரம் பாய்ச்சி தீர்த்து கட்டிய கள்ளக்காதல் ஜோடி.!
நாமக்கல் மாவட்டத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கள்ளக்காதலுடன் சேர்ந்து அவரது மனைவி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக இருவரை காவல் துறை கைது செய்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த மோகன்ராஜ் மற்றும் கீர்த்தனா தம்பதியினர் அங்கு வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் கீர்த்தனாவிற்கும் அதே பகுதியைச் சார்ந்த கதிரேசன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளத்தொடர்பாக மாறி உள்ளது.
கதிரேசனும் கீர்த்தனாவும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களது கள்ளக்காதலுக்கு அவரது கணவர் மோகன்ராஜ் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளனர். அவர்களது திட்டத்தின் படி நேற்று மோகன்ராஜ்க்கு தூக்க மாத்திரை கொடுத்து உறங்கச் செய்துள்ளனர். அவர் உறங்கிய பின்னர் அவர் மீது மின்சாரத்தை பாய்ச்சி கொடூரமாக கொலை செய்திருக்கிறது கள்ளக்காதல் ஜோடி.
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக கூடிய கீர்த்தனாவிடம் போலீசார் கிடுக்கு பிடி விசாரணை செய்ததால் உண்மையை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு உறுதுணையாக இருந்த அவரது கள்ளக்காதலன் கதிரேசனும் கைது செய்யப்பட்டார் . இச்சம்பவம் நாமக்கல் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.