மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நீரில் மூழ்கடித்து பெண் கொலை.!! போக்சோ குற்றவாளி வெறி செயல்.!!
வேதாரண்யம் அருகே தன்மீது போக்சோ வழக்கு பதிவு செய்த பெண்ணை கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற 43 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளிக்கச் சென்ற பெண் கொலை
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவை சேர்ந்த கலைமகள் என்ற பெண் தனியாருக்கு சொந்தமான குட்டையில் குளிக்க சென்று இருக்கிறார். அவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் குட்டைக்கு சென்று பார்த்தபோது சடலமாக மிதந்து இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவரது உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சந்தேக வழக்காக பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
சிக்கிய குற்றவாளி
இந்நிலையில் கலைமகளின் உறவினரான சண்முகநாதன் என்ற 43 வயது நபர் அக்டோபர் 10ஆம் தேதி தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரிடம் விசாரித்த போது கலைமகளை தண்ணீருக்குள் அமுக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இது தொடர்பாக காவல்துறையிடம் ஒப்புதல் வாக்கு மூலமும் அளித்தார்.
இதையும் படிங்க: 14 வயது சிறுமி கர்ப்பம்.!! 63 வயது முதியவருக்கு சாகும் வரை சிறை.!!
போக்சோ வழக்கில் புகார்
கடந்த மே மாதம் கலைமகளின் உறவினரான 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார் சண்முகநாதன். இது தொடர்பாக கலைமகள் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து காவல்துறை போக்சோ வழக்கில் சண்முகநாதனை கைது செய்தது. தற்போது ஜாமீனில் வெளிவந்த அவர் கலைமகளை பழிவாங்குவதற்காக கொலை செய்ததாக ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: #Breaking: அப்படிப்போடு.. நாளை 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.!