மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காவேரியில் குதித்து பெண் தற்கொலை முயற்சி.. உயிரை காப்பாற்றிய மீனவர் & இளைஞர்.!
காவிரி ஆற்றில் பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற போது, பாலத்திலிருந்து ஆற்றுக்குள் குதித்து இளைஞர் ஒருவர் அவரை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருங்கல்பாளையம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பாளையத்தையும் இணைப்பது காவிரி ஆற்றுப்பாலமாகும். அங்கிருந்து 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஆற்றுக்குள் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார்.
இதனை கண்ட ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவர், தனது பரிசலை பெண்ணின் அருகே கொண்டு சென்று காப்பாற்ற முயன்றுள்ளார். இருப்பினும் அவரால் தனியாக பெண்ணை காப்பாற்ற முடியாத நிலையில், பாலத்தில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர், உடனடியாக ஆற்றில் குதித்து பெண்ணை காப்பாற்றுவதற்காக உதவி செய்துள்ளார்.
தொடர்ந்து இருவரும் சேர்ந்து அந்தப் பெண்ணை கரைக்கு அழைத்து சென்றபின், இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். மேலும், ஆற்றில் குதித்த பெண்ணிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது அவர் ஆவுதிபாளையம் பகுதியை சேர்ந்த ராதா என்பதும், குடும்ப பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்து, தற்போது தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.