பாமரனுக்கு சட்டமும்-காவல்துறையும் உதவியாக இல்லை: இளம்பெண் பரபரப்பு புகார்.. காரணம் என்ன?.!



Women Raise Voice for Poor Peoples Who Want Justice 

 
பாஜக பிரமுகரும், நடிகையுமான ரஞ்சனா நாச்சியார், அரசுப்பேருந்தின் படிக்கட்டில் தொங்கிச்சென்ற பள்ளி மாணவர்களை தாக்கி, அவதூறாக பேசி கண்டித்ததால் கைது செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து, நிபந்தனை ஜாமின் பெற்று வெளியே வந்துவிட்டார். 

இந்த விவகாரத்தில் காவல் துறையினர் நடிகையை கைது செய்ய, அரசு வாகனத்தை எடுத்து சென்றனர். நடிகை தனது காரில் வருவதாக கூறியும், காவல் வாகனத்தில் மட்டுமே வரவேண்டும் என விடாப்பிடியாக அழைத்து ஏற்றிச்சென்றனர். 

இந்நிலையில், அரசியல் சார்ந்த விஷயங்களில் காவல் துறையினர் காண்பிக்கும் கைது ஆர்வம், அப்பாவி சாமானியர்களிடம் காண்பிப்பது இல்லை. அவர்கள் புகார் அளித்தால் அலையவிடப்படுகின்றனர் என பெண்மணி ஒருவர் குற்றச்சாட்டை முன்வைத்து அதிர்ச்சி வீடியோ வெளியிட்டுள்ளார். 

அந்த வீடியோவில், "பாமர மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தால், காவல் துறையினர் அதனை கண்டுகொள்வது இல்லை. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக விக்ரம் வேதகிரி என்பவர், பல பெண்களிடம் பழகி, அத்துமீறி, வீடியோ எடுத்து மிரட்டிய புகார் குறித்து நான் மகளிர் காவல் நிலையத்தில் அளித்தேன். 

அங்கு புகார் ஏற்றுக்கொள்ளப்படாமல் தாமதம் செய்யப்பட்டதால், காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்து, செய்தியாளர்களை சந்தித்தேன். இதனால் ஊடகம் வரை விஷயம் சென்றுவிட்டது என, மகளிர் நிலைய காவல் துறையினர் அவசர அவசரமாக புகார் பதிவு செய்தனர். 

சரியான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்படாமல், அன்றைய நாளில் அவசர கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. கைது செய்ய காவல் துறையினர் செல்ல கார் இல்லை என்று கூறினார்கள். என்னிடம் காரை அழைத்துவர சொன்னார்கள். 

ரூ. 2 ஆயிரம் செலவு செய்து குற்றவாளியின் இருப்பிடத்திற்கு சென்று கைது செய்தால், அவரை சில நாட்களில் ஜாமினில் விடுதலை செய்யும் அளவு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின்போது தங்களிடம் சொல்லுமாறு காவல் அதிகாரிகளிடம் கூறியும் பலனில்லை. 

அரசியல் வழக்குகளுக்கு அதிகாரிகள் காண்பிக்கும் ஆர்வம், பாமர மக்களின் புகார்களுக்கு காண்பிப்பது இல்லை. இதனால் இன்று பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்த வேதகிரி, பல பெண்களின் வாழ்க்கையை தொடர்ந்து சீரழித்து வருகிறார். காவல்துறை, நீதித்துறை கண்துடைப்புக்கு வேலை செய்கிறார்கள்" என கூறி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.