மர குடோனில் திடீர் தீ விபத்து., 3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்!!



wood fire in chennai manali

சென்னை மணலியில் உள்ள வைத்தியலிங்கம் என்பவர் சொந்தமாக மர குடோன் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த மர குடோனில் கனரக வாகனங்கள் மூலம் பொருட்கள் கொண்டு செல்வதற்காக பயன்படுத்தும் பேலட் என்னும் கட்டைகளை அடுக்கி வைத்திருந்தார்.

அப்பொழுது சம்பவ தினத்தன்று எதிர்பாராத விதமாக அதிகாலை நேரத்தில் கட்டைகள் தீப்பிடித்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை ஏற்பட்டு தீ பற்றி எரிந்தது. மேலும், புகையினால் அக்கம் பக்கத்தில் இருந்த மக்களுக்கு மூச்சு திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டு அவதிப்பட்டு உள்ளனர்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் மாதாவரம், கொளத்தூர், மணலி மற்றும் எண்ணூர் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து ஏழு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

இரண்டு மணி நேரம் போராட்டத்திற்குப் பிறகு அந்த தீயை வீரர்கள் அணைத்து உள்ளனர். இந்த மர குடோன் தீ விபத்தில் மூன்று லட்சம் மதிப்புள்ள கட்டைகள் மற்றும் இயந்திரங்கள் தீக்கிரையாகியுள்ளது. மேலும் இந்த விபத்து குறித்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.