விபத்தில் சிக்கிய இளைஞருக்கு முதலுதவி செய்த போலீசார்.! கடைசியில் இளைஞரால் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!



Young man accident chennai

சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த 26 வயது இளைஞர் ஒரு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஆழ்வார் பேட்டை வழியாக வந்து கொண்டிருக்கும் போது விபத்து ஒன்றில் சிக்கியுள்ளார்.

அதனை அடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த இளைஞரை மீட்டு முதலுதவி செய்துள்ளனர். அந்த இளைஞருக்கு கால் முறிவு ஏற்ப்பட்டுள்ளது. எனவே அவரை போலீசார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

young man

இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞருக்கு தொடர் இருமல், சளி பிரச்சனை இருந்துள்ளது. அதனை அடுத்து அந்த இளைஞருக்கு மருத்துவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். அந்த பரிசோதனையில் இளைஞருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

உடனே அந்த இளைஞருக்கு உதவிய போலீசாரை தனிமைப்படுத்தியுள்ளனர். மேலும் போலீசாரின் தொடர்பில் இருந்த அனைவரையும் தனிமைப்படுத்தி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.