35 நாட்கள்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சுனிதா உருக்கமாக போட்ட முதல் போஸ்ட்.!
AI தொழில்நுட்பத்தை உபயோகிக்காதீர்கள்.. பேராபத்து..! கூகுள் எச்சரிக்கை..!!
தொழில்நுட்ப உலகின் அடுத்த பரிணாம வளர்ச்சியாக சாட்ஜிபிடி தொழில்நுட்பம் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த தொழில்நுட்ப நிறுவனத்திற்கு போட்டியாக சாட்போட், மைக்ரோசாப்ட் என அடுத்தடுத்து நிறுவனங்களும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது.
கூகுள் நிறுவனம் பார்ட் என்ற பெயரில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. AI தொழில்நுட்பம் பல தகவல்களை சேமித்து வைத்திருப்பது மட்டுமில்லாமல் பயனர்களுக்கு ஏற்றவாறு அதனை அமைத்து தரக்கூடியது.
ஊழியர்கள் சிலர் இணைந்துதான் ஒரு வெப்சைட் உருவாக்க இயலும் என்ற நிலைமாறி, நாம் AI தொழில்நுட்பம் வாயிலாக இதனை உருவாக்கிக் கொள்ளும் சூழலும் ஏற்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் இதர தொழில் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் வேலைப்பளுவை குறைப்பதற்காக அமைத்தாலும் பல வேலை நீக்கங்களும் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் AI தொழில்நுட்பத்திற்கு எதிராக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி AI தொழில்நுட்பத்தில் நம்பிக்கை மிகுந்த தகவல்களை பரிமாறும்போது அவை வெளியாவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்றும், AI வாங்கும் தகவல்களை அது நகலாக வெளியிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படியான பிரச்சனையை சரி செய்ய தொழில்நுட்பக்குழு தொடர்ந்து இயங்கி வருவதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. சுமார் 180 நாடுகளில் 40 மொழிகளில் கூகுள் நிறுவனம் தனது பார்ட் தொழில்நுட்பத்தை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.