சிறகடிக்க ஆசை.. சர்ச்சை நாயகிக்கு, ஹீரோயின் வாய்ப்பு.. ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சுருதி நாராயணன்.!
ஜியோ ஆன்டிராய்டு ஃபோன்.. விலை இவ்வளவு குறைவா.?! முகேஷ் அம்பானி அறிமுகம்.!

பட்ஜெட் விலையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சார்பில் புதிய ஜியோ ஆண்ட்ராய்டு போன் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்த ஆண்டிற்கான ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி நடைக்கவுள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் அம்பானி புதிய ஜியோ ஆண்ட்ராய்டு போனை அறிமுகப்படுத்த இருக்கின்றார். இந்த ஆண்ட்ராய்டு போன் குறித்த அறிவிப்பை கடந்த ஆண்டு அவர் வெளியிட்டார்.
இதற்கான உற்பத்தி மற்றும் இதர வேலைகள் அதன் பின் துவங்கி நடைபெற்று வந்த நிலையில் இந்த ஆண்டு ஜியோ போன் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இந்த ஜியோ ஆண்ட்ராய்டு போன் ₹.8000 முதல் ₹.10000 வரை சந்தைகளில் விற்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
குறைந்த பட்ஜெட்டில் விற்கப்படும் இந்த ஃபோனில் உள்ள முக்கிய சிறப்பம்சங்கள் :
13 MP camera,
4 GB RAM,
6.5-inch HD+ LCD 90Hz screen,
5,000mAh battery உள்ளிட்டவைகளை கொண்டதாக இருக்கலாம்.