சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!
மகளிர் தினத்தில் இந்திய விமானப்படையில் சாதித்த வீரமங்கை பற்றி சில வரிகள்!
இன்று உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய தினத்தில் நமது தேசத்தில் சாதனைப் படைத்த பல பெண்களை பற்றி நாம் நிச்சயம் நினைவு கூறி அவர்களைப் போற்ற வேண்டும். இந்த பதிவில் நமது விமானப்படையில் சாதிக்கும் பெண் விமானி அவனி சதுர்வேதி பற்றி பார்ப்போம்.
அவனி சதுர்வேதி இந்தியா விமானப்படையில் மிக்-21 பேசன் ரக ஜெட் விமானத்தை இயக்கிய முதல் பெண் விமானி ஆவார். இந்தியாவில் அதிகமான தரைதளம் மற்றும் ஆரம்பத்திலேயே அதிவேகமாக இயங்க கூடிய ஜெட் விமானம் தான் மிக்-21 பேசன். இந்த விமானத்தை முதன்முதலில் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் 30 நிமிடம் இயக்கிய பெண் அவனி சதுர்வேதி ஆவார்.
அக்டோபர் 27, 1993 ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் ரேவா மாவட்டத்தில் பிறந்தவர் அவனி சதுர்வேதி. இவர் தனது பள்ளி படிப்பை மத்திய பிரதேசம் டியோபன்டில் முடித்தார். இவர் இந்திய விமான படையில் பணியாற்றிய இவரது மூத்த சகோதரரால் மிகவும் ஈர்க்கப்பட்டார். அதன் காரணமாகவே இவருக்கும் விமானப்படையில் சேரும் ஆர்வம் உண்டானது.
இவர் ராஜஸ்தான் பனஸ்தாலி பல்கலைக்கழகத்தில் B. tech படிப்பை முடித்தார். இவரால்தான் விமானப்படை விமானங்களை பெண்களும் இயக்கும் வல்லமை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பிடித்தது. 2014ல் பட்டப்படிப்பை முடித்த இவர் விமானப்படையில் சேர்வதற்கான AFCAT நுழைவுத் தேர்வை அதே ஆண்டில் எழுதினார். இவர் கல்லூரியில் படிக்கும் பொழுதே விமானங்களை இயக்கும் பயிற்சியில் ஈடுபட்டு பல மணி நேரம் விமானங்களை இயக்கியுள்ளார்.
இவர் விமானப்படை நுழைவுத் தேர்வில் இந்தியாவிலேயே இரண்டாவது இடம் பிடித்து சாதனை படைத்தார். தேர்வில் வெற்றி பெற்ற இவர் 2015 ஜனவரி மாதம் முதல் ஹைதராபாத் தண்டுக்கல்லில் உள்ள இந்திய விமான படை பயிற்சி மையத்தில் இணைந்து ஓராண்டு பயிற்சியில் ஈடுபட்டார்.
இந்திய விமானப்படையில் பறக்கும் விமானிகளாக சேர்ந்த முதல் மூன்று பெண்களில் அவனியும் ஒருவர். பாவனா காந்த் மற்றும் மோகனா சிங் ஆகியோர் மற்ற இரு பெண்மணிகள் ஆவர். 2016ம் ஆண்டு ஜூன் மாதம் 16ஆம் தேதி இவர்கள் இந்திய விமானப் படையில் விமானிகளாக பணியில் சேர்ந்தனர். இவருக்கு செஸ் மற்றும் டேபிள் டென்னிஸ் விளையாடுவது பிடிக்கும். மேலும் படம் வரைதலிலும் ஆர்வம் கொண்டவர்.
இவர் தனது கனவை பற்றி கூறியபொழுது, "இந்திய விமானப் படையில் சிறந்த வீராங்கனையாக திகழ வேண்டும். நாட்டுக்காக போர் புரியும் பொழுது உயர் அதிகாரிகள் என் மீது நம்பிக்கை வைத்து என்னை அனுப்பி வைக்கும் அளவிற்கு சிறந்து விளங்க வேண்டும். மேலும் உலகில் உள்ள மிகவும் சக்தி வாய்ந்த போர் விமானத்தை இயக்க வேண்டும்" என கூறியுள்ளார்.
இத்தகைய சிறப்பு மிக்க வீராங்கனையை இந்நாளில் நினைவு கூறுவதோடு மட்டுமல்லாமல் நம்முடைய ஒவ்வொருவர் இல்லத்திலிருந்தும் இவரைப் போன்ற வீராங்கனைகள் நாட்டிற்காக உருவாக வேண்டும் என நாம் முடிவு செய்வோம். இந்த மகளிர் தினத்தில் இதனை அனைத்து மகளிருக்கும் பகிர்ந்து அவர்களை பெருமைப்படுவோம்.