மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இன்சூரன்ஸ் பணத்திற்கு ஆசைப்பட்டு கள்ளகாதலியின் திட்டப்படி மனைவி கொலை; இன்பச்சுற்றுலா அழைத்துச்சென்று பயங்கரம்.!
அமெரிக்காவில் உள்ள கொலரோடா மாநிலம், பாரடைஸ் வேலி பகுதியை செர்ந்த பல் மருத்துவர் லேரி ருடால்ப். இவரின் மனைவி பியங்கா ருடால்ப். தம்பதிகள் இருவரும் 34 ஆண்டுகள் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர்.
கடந்த 2016ல் வனவிலங்குகளை வனத்தில் நேரில் காணும் வகையில், ஆப்ரிக்காவில் உள்ள ஜாம்பியாவுக்கு சுற்றுலா சென்றனர். சுற்றுலா முடிந்து ஊருக்கு திரும்பிய சமயத்தில், அக் 11ம் தேதியில் துப்பாக்கிசூடு சம்பவத்தில் பியன்கா பலியாகினர்.
மனைவி தற்கொலை செய்துகொண்டதாக ஜாம்பியா காவல்துறை அதிகாரிகளிடம் லேரி தெரிவித்து இருக்கிறார். இந்த விஷயம் தொடர்பாக அந்நாட்டு புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், பியங்காவின் மரணம் தற்கொலை எனவே அறிக்கை முடிவுகள் பெறப்பட்டன.
இதனால் பியங்காவின் காப்பீடு தொகை லேரியிடம் வழங்கப்பட்டது. அமெரிக்க புலனாய்வுத்துறை அதிகாரிகளோ பியங்காவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக எண்ணியுள்ளனர். அது தொடர்பான விசாரணையும் நடந்துள்ளது.
விசாரணையில், பியன்காவின் இதயத்தை துளைத்த துப்பாக்கிகள் 3.5 அடிகள் தூரத்தில் இருந்து 2 முறை சுடப்பட்டு இருக்க வேண்டும் என கண்டறியப்பட்டதால், அமெரிக்க புலனாய்வுத்துறை பல நாடுகளுக்கு சென்று சாட்சிகளிடம் விசாரணை நடத்தி இறுதியில் லேரியை கைது செய்துள்ளது.
விசாரணையில், லேரிக்கு பியங்காவின் காப்பீடு தொகையை பெற வேண்டும் என்ற ஆசை எழுந்தாலும், மற்றொரு காதலியான லோரி மில்லிரனை திருமணம் செய்ய எழுந்த ஆசையாலும் மனைவியை திட்டமிட்டு தீர்த்துக்கட்டியது அம்பலமானது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை டென்வர் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், லேரி மீதான குற்றச்சாட்டு நிரூபணமாகி, ஆயுள் தண்டனை மற்றும் 15 மில்லியன் டாலர் (ரூ.124 கோடி) அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. லேரியின் காதலி லோரிக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.