அடேங்கப்பா!! கிலோ ரூ.1500க்கு விற்பனையாகும் கோதுமை.. பாகிஸ்தானில் மக்கள் கடும் திண்டாட்டம்..!



atengappa-wheat-sold-at-rs-1500-per-kg-people-of-pakist

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் கோதுமை மாவுக்கு ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாடு காரணமாக கிலோ 1500 ரூபாய் வரை விற்பனை ஆவதால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.மேலும் பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி கூட இந்த கோதுமை மாவு விலை ஏற்றத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று மக்கள் கூறுகின்றனர். 

இதனையடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் அரசு சார்பாக பொதுமக்களுக்கு குறைந்த விலையில் கோதுமை மாவு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த கோதுமை மாவை வாங்குவதற்கு கடும் கூட்டம் நிலவியதால் இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிர் இழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Pakistan

இந்நிலையில் போதுமான அளவு கோதுமை மாவு இருப்பு வைக்காததே கோதுமை மாவு விலை ஏற்றத்திற்கு காரணம் என்று பாகிஸ்தான் அரசு மீது அந்நாட்டு மக்கள் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளனர்