ரத்தமாக மாறிய கடல் டென்மார்க்கில் நடக்கும் அதிசய திருவிழா



denmark-whale-murder-the-whole-sea

டென்மார்க்கில் : கடலில் வாழும் திமிங்கலங்களை கொன்று அதன் ரத்தத்தை கடலில் கலந்துவிடும் டென்மார்க் திருவிழா உலக மக்களை திகைக்க வைத்துள்ளது. 

dalphin

டென்மார்க்கில் உள்ள மக்கள் பல திமிங்கலங்களை கொன்று கடலில் அதன் ரத்தத்தை கடலில் கலக்கிறார்கள். இதை அவர்கள் திருவிழாவாக நடத்தி வருகிறார்கள். 

டென்மார்க்கில் உள்ள பரோயே என்ற தீவில் எல்லா ஆண்டும் கோடைகாலத்தின் முடிவில் இந்த திருவிழா கொண்டாடப்படும். கடலில் வாழும் திமிங்கலங்களை கொன்று குவிப்பதே இந்த திருவிழாவின் சடங்கு ஆகும். அந்த தீவில் வாழும் மக்கள் ஒன்று சேர்ந்து படகுகளில் கூட்டம் கூட்டமாக கடலுக்குள் செல்கிறார்கள். கடலுக்குள் சென்ற பிறகு , கடலுக்குள் இருக்கும் திமிங்கலங்களை கரை பகுதிக்கு ஓட்டி வருகின்றனர். பின்பு கடற்கரையில் ஒதுங்கும் திமிங்கலங்களை அவர்கள் கொண்டுவரும் கூரிய கத்தியால் வெட்டிக் கொல்கின்றனர். இந்த திருவிழாவில் 5 வயது சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை திமிங்கலங்களை எந்த வித அச்சமும் இல்லாமல் கொல்கின்றனர். அது மட்டும் அல்லாமல் இந்த நிகழ்ச்சி 16-ம் நூற்றாண்டில் இருந்து நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எல்லா வயதினரும் திமிங்கலங்களை கொல்லும் நிகழ்ச்சியில் ஆண்டுதோறும் கலந்து கொள்கின்றனர்.

உலகத்தில் உள்ள அனைத்து விலங்குகள் நல ஆர்வலர்களும் இந்த திருவிழாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனால் இங்குள்ள மக்கள் கொஞ்சம் கூட அதை பொருட்படுத்தாமல் ஆண்டுதோறும் திருவிழாவை கோலாகலமாக நடத்தி வருகின்றனர். கொல்லப்படும் திமிங்கலங்களின் உடலில் இருந்து வெளியாகும் ரத்தம் அனைத்தும் கடலுக்குள் கலந்து, சிவப்பாக மாறி, கடல் ரத்த வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது.