மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து... 11 குழந்தைகள் உடல் கருகி பலி.. நெஞ்சை உலுக்கும் சோகம்..!
புதிதாக கட்டப்பட்ட மருத்துவமனை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதில் 11 பச்சிளம் குழந்தைகள் இறந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான செனேகல் பகுதியில் உள்ள திவாவோன் நகரில் புதிதாக மருத்துவமனை ஒன்று கட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குழந்தைகள் வார்டில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 16 குழந்தைகள் மூச்சுத்திணறி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர், உடனடியாக தீயை அணைத்து 3 குழந்தைகளை உயிருடன் மீட்டுள்ளனர். இதற்கிடையில் இந்த தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து டுவிட்டரில் அந்நாட்டு அதிபர் மேக்கி சால் கூறும்போது, "பொது மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 11 பச்சிளம் குழந்தைகள் இறந்ததை அறிந்து நான் மிகவும் வருத்தம் அடைகிறேன்" என்று தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.