#BigBreaking: ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் 50 நிமிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி...!



Indian Prime Minister Speech with Russia President Vladimir Putin Today

உக்ரைன் விவகாரம் தொடர்பாகவும், இந்திய மக்களின் பாதுகாப்பை வெளியேற்றம் தொடர்பாக இந்திய பிரதமர் - ரஷ்ய அதிபர் பேசிக்கொண்டனர்.

உக்ரைன் - ரஷியா போர் 11 ஆவது நாளாக தொடர்ந்து நடைபெறும் நிலையில், சில நகரங்களில் தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அங்கு சிக்கியுள்ள இந்தியர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் எல்லைப்பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும், உக்ரைன் இராணுவமும், அந்நாட்டு மக்களும் ஆயுதமேந்தி ரஷிய படைகளுக்கு எதிராக தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றனர். இன்று காலை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசியிருந்தார். இந்நிலையில், ரஷிய அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி பேசியிருக்கிறார். 

ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன், இந்திய அதிபர் நரேந்திர மோடி 50 நிமிடங்கள் பேசி இருக்கிறார். இந்த அழைப்பின் போது, உக்ரைன் விவகாரம் தொடர்பாக தகவலை பரிமாறிக்கொண்டனர். மேலும், பேச்சுவார்த்தை தொடர்பான தகவலையும் ரஷிய அதிபர் புதின் மோடியிடம் தெரிவித்துள்ளார்.   

Prime minister

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தவும் பிரதமர் மோடி ரஷிய அதிபருக்கு கோரிக்கை வைத்துள்ளார். சுமி உட்பட சில பகுதிகளில் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ரஷிய அதிபருக்கு பாராட்டு தெரிவித்த நரேந்திர மோடி, இந்திய மக்களை பாதுகாப்புடன் வெளியேற்ற கோரிக்கை வைத்தார். 

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்திய மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற தேவையான அனைத்து நடவடிக்கைக்கும் ரஷியா ஒத்துழைக்கும் என்று தெரிவித்தார்.