குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க நைட் ஷிப்ட் ரத்து; நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பால் கிடைத்த பலன்.!



Japan Itochu Corp Employees Birth Rate 

 

உலகளவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் என்பது சமீபமாகவே குறைந்து வருகிறது. குறிப்பாக சீனாவில் அந்நாட்டு அரசு முன்பு தம்பதிகள் ஒரு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்வது சட்டரீதியாக குற்றம் என அறிவித்து, அதனால் ஏற்பட்ட எதிர்கால பாதிப்புகளை சந்திக்க தொடங்கியுள்ளது. 

இதனால் தனது நாட்டின் மக்கள் தொகையில் பெரும்பாலானோரை வயோதிகர்களாகிறார்கள் என்ற உண்மையை அறிந்து அத்தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜப்பானில் கடந்த 2010ல் Itochu Corp நிறுவனத்தின் CEO எதிர்கால ஜப்பானின் நிலைமையை எண்ணியுள்ளார். 

japan

அதாவது, அந்நாட்டில் இருக்கும் மக்கள் திருமணம் செய்ய விருப்பம் இல்லாமல், குழந்தை பிறக்க வேண்டாம் என எண்ணி இருக்கின்றனர். பரவலாக இக்கருத்து அந்நாட்டு மக்களிடையே அதிகளவில் உலவுகிறது. இதனால் குழந்தைகள் பிறப்பு விகித பிரச்சனையை ஜப்பானும் சந்திக்க தொடங்கியுள்ளது.

இதனை முன்கூட்டியே உணர்ந்த Itochu நிறுவனத்தின் தலைமை நிர்வாக செயல் அதிகாரி, ஊழியர்களுக்கு இரவு வேலையை நிறுத்தினார். இரவு 8 மணிக்கு அலுவலகமும் முடிந்துவிடும். இதனால் தற்போது அந்நிறுவனத்தின் பெண் ஊழியர்களுக்கு குறைந்தது 2 குழந்தைகள் பிறந்துள்ளன. இதனால் ஜப்பானின் பிறப்பு விகித 1.3 ஆக உயர்ந்து இருக்கிறது.