ஒரு லிட்டர் பாலின் விலை ரூ.210 முதல் ரூ.1,100 வரை.. கடுமையாக அவதிப்படும் மக்கள்.. பதறவைக்கும் துயரம்.!



Pakistan Crisis Liter Milk sales on Rs 1100 In Karachi

அன்னிய செலவாணி பற்றாக்குறை காரணமாக பாகிஸ்தான் திணற தொடங்கியுள்ள பாகிஸ்தானில் பாலின் விலை ரூ.ஆயிரத்தை கடந்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடியானது நிலவி வருவதால், அந்நாட்டில் விற்பனை செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலை என்பது கடுமையாக அதிகரித்துள்ளது. பணவீக்கம், பொருளாதார நெருக்கடி, மழை-வெள்ளம் காரணமாக மேற்படியான சிக்கலும் ஏற்பட்டுள்ளது.

இதனால் எரிபொருள் தட்டுப்பாடு, அன்னிய செலவாணி பற்றாக்குறை காரணமாக பாகிஸ்தான் திணற தொடங்கியுள்ளதால் ரொட்டி, பால் மற்றும் அது சார்ந்த பொருட்கள், கோதுமை போன்ற அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை என்பது உச்சத்தை அடைந்துள்ளது. 

Pakistan

சில்லறை விற்பனையில் பால் லிட்டரின் விலை ரூ.210 எனவும், கோழி இறைச்சி ரூ.1000 முதல் ரூ.1100 வரையிலும் என விற்பனை செய்யப்படுகிறது. பாலின் விலை முக்கிய நகரமான கராச்சியில் 1000 வரையிலும் செல்கிறது. இதனால் பாகிஸ்தான் சர்வதேச நாணய நித்தியத்திடம் கடன் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறது. ஆனால், அதனை நிதியம் நிராகரித்துவிட்டது.