மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கோவிலுக்குள் புகுந்து சாமி சிலைகளை சேதப்படுத்திய ஆசாமி.. பாகிஸ்தானில் கொடூரம்.!
பாகிஸ்தான் நாட்டில் உள்ள சிந்து மாகாணம், கராச்சி நகர் அருகேயுள்ளது நரேன்புரா. இந்த ஊரில் நாராயணன் சாமி கோவில் உள்ளது. நேற்று, காலை நேரத்தில் இந்த கோவிலில் உள்ளூர் இந்து மக்கள் வழிபாடு நடத்திக்கொண்டு இருந்தனர்.
அப்போது, கோவிலுக்குள் வந்த வாலிபர், திடீரென சாமி சிலைகளை அடித்து உதைத்து சேதப்படுத்தி இருக்கிறார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படவே, அங்கிருந்த இந்துக்கள் வாலிபரை பிடித்து காவல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
வாலிபரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சாமி சிலைகள் சேதப்படுத்தப்பட்டதை அறிந்த மக்கள், காவல் நிலையத்திற்கு முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர்.
பாகிஸ்தானில் இந்துக்கள் தாக்கப்படுவதும், இந்து கோவில்கள் சேதப்படுத்தப்படுவதும், இந்து மதத்தை சார்ந்த இளம் சிறுமிகள் கடத்தப்பட்டு, கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் செய்யப்படும் கொடூரம் தொடர்ந்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.