ரஷ்ய அரசியலில் பேரதிர்ச்சி; சிறையில் அடைக்கப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவல்னி மரணம்.!



russian-opposition-leader-alexei-navalny-died

 

ரஷிய அரசியலில் தன்னை மிகப்பெரிய சக்தியாக நிலைநிறுத்திக்கொண்ட விளாடிமிர் புதின், தொடர்ந்து தனக்கு சாதகமான நடவடிக்கையை எடுப்பதன் வாயிலாக தன்னை அதிபராக நிலைநிறுத்தி வந்தார். 

கடந்த 2019ம் ஆண்டு சர்வதேச அளவில் கவனிக்கப்பட்ட அலெக்சி நவல்னி,  அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வந்தார். இவர் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக பல்வேறு குற்றசாட்டுகளை உலக நாடுகளிடம் முன்வைத்து இருந்தார். 

russia

இதனால் ரஷிய அரசு 2021ம் ஆண்டு ஜெர்மனியில் இருந்து ரஷ்யா வந்த அலெக்சியை கைது செய்து சிறையில் அடைத்தது. அவரை ஆர்டிக் பகுதியில் இருக்கும் ரஷியாவுக்கு சொந்தமான யமலோ-நெனெட்ஸ் பிராந்திய சிறையில் அடைத்தனர். 

இந்நிலையில், 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட அலெக்சி (47) இன்று மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரின் மரணம் சிறை நிர்வாகத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.