மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரஷ்யாவின் அட்டூழியம்... உக்ரைனில் நடத்திய வான்வெளி தாக்குதல்... பலி எண்ணிக்கை மூன்றாக அதிகரிப்பு..!
ரஷ்யாவின் தென்மேற்கில் உள்ள உக்ரைன் மீது பெரிய அளவிலான தாக்குதலை ரஷ்யா நடத்தி வருகிறது. 2022 பிப்ரவரி 24 அன்று ரஷ்ய அதிபரான புதின் உக்ரைன் மீது சிறப்பு ராணு நடவடிக்கையை அறிவித்தார். இதனை தொடர்ந்து சில நிமிடங்களிலே உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட நாடு முழுவதும் உள்ள இடங்களில் ஏவுகணை தாக்குதல்களை தொடங்கியது.
இதன்படி இன்று வரை நிலவி வரும் உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் இன்று வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. உக்ரைனில் உள்ள கீவ் புறநகர் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 17 வயது சிறுமி உட்பட 3 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 11 பேர் படுக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் உக்கரைனின் மின் கட்டமைப்புகளை குறிவைத்து ஏவுகணை தாக்குதலை ரஷ்யா நடத்தி வருகின்றது. இதனால் உக்ரைனில் உள்ள பல நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன. மேலும் ரஷ்ய படைகள் உக்ரைனில் வான்வழி தாக்குதலை அடுத்தடுத்து நிகழ்த்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.