திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ரஜினி தற்கொலை முயற்சியா.? ரசிகர்களை அதிர்ச்சியில் உறையவைத்த தகவல்.!
தமிழ் சினிமாவின் அடையாளம் :
கோலிவுட் சினிமாவில் முக்கிய அடையாளமாக திகழ்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர். தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இவர் பல மொழிகளில் ரசிக்கப்படக்கூடிய நடிகர். இவருக்கு இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவில் ரசிகர் கூட்டம் இருக்கிறது.
வேட்டையன் படப்பிடிப்பில் ரஜினி :
இறுதியாக ரஜினியின் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகியது. அடுத்ததாக, தற்போது அவர் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். தற்போது, மிகவும் விறுவிறுப்பாக வேட்டையன் படப்பிடிப்பு நடந்து வருகின்றது.
ரஜினி தற்கொலை முயற்சியா.?
இந்த நிலையில், ரஜினி குறித்து வெளியாகி இருக்கும் ஒரு தகவல் ரசிகர்களை அதிர வைத்துள்ளது. அதாவது ரஜினி முன்பொருகாலத்தில் வறுமையின் பிடியில் இருந்த போது தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: கூலி பட இசை காப்புரிமை விவகாரம்; ரஜினிகாந்தின் நிலைப்பாடு என்ன?.. நச் பதில்.!
வறுமையின் பிடியில் ரஜினி :
ரஜினிகாந்த் ஆரம்ப காலத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தபோது கூலி வேலை மற்றும் ஆபீஸ் பாய் என்று அனைத்து வேலைகளையும் செய்து வந்தவர். இருப்பினும், அவர் மிகவும் வறுமையில் வாடியதால் ஒரு கட்டத்தில் வாழ்க்கையை வெறுத்து அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
ஜொலிக்கும் சூப்பர் ஸ்டார் :
அதன் பிறகு தானே தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டு படிப்படியாக வளர்ந்து தற்போது அவர் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். சூப்பர் ஸ்டார் குறித்த இந்த தகவல் தற்போது வெளியாகி அவரது ரசிகர்களை அதிர வைத்துள்ளது.
இதையும் படிங்க: பாட்ஷா இரண்டாம் பாகத்தில் ரஜினிகாந்த்-அஜித்குமார்?.. வைரலாகும் பேன் மேட் போஸ்டர்.!