"கோழைகளே... கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.." ஜிபியு விமர்சனம்.!! நடிகை திரிஷா பதிலடி.!!
மருத்துவர்கள் எச்சரிக்கை.! சர்க்கரை நோயாளிகள் இரவில் சப்பாத்தி சாப்பிடக்கூடாது.. ஏன் தெரியுமா.!?

நீரிழிவு நோய்க்கான காரணம்
தற்போதுள்ள காலகட்டத்தில் சர்க்கரை நோய் என்பது பலருக்கும் இருந்து வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் சர்க்கரை நோயின் பாதிப்பு இருந்து வருகிறது. இதற்கு காரணமாக கூறப்படுவது, தவறான உணவு பழக்க வழக்கங்களும், வாழ்க்கை முறையும் தான். அதிகமான துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றை எடுத்துக் கொள்வது இதற்கு முக்கிய காரணமாக கருதப்பட்டு வருகிறது.
கட்டுப்பாடான உணவும் வாழ்க்கை முறையும்
ஒருவரது உடலில் தேவையான அளவு இன்சுலின் சுரக்காமல் இருந்தால் அவர்கள் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரை உடலிலேயே தேங்கிவிடும். இதை தான் சர்க்கரை நோய் என்று குறிப்பிட்டு வருகின்றனர். எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் உண்ணும் உணவை கட்டுப்பாடுடன் உண்பது மிகவும் அவசியம். மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் டீ, காபி, சாதம், கார்பனேட்டட் பானங்கள், கிழங்கு வகைகள், பழங்கள் போன்ற இனிப்பு நிறைந்துள்ள எதையும் உண்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
இதையும் படிங்க: ஒரே நொடி.. சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்த உதயம் திரையரங்கம்; நெஞ்சை ரணமாக்கும் காட்சிகள்.!
ஆனால் சர்க்கரை நோயாளிகள் கோதுமை மாவில் சப்பாத்தி சாப்பிடலாமா கூடாதா என்ற கேள்வி பலருக்கும் இருந்து வருகிறது. இது குறித்து மருத்துவர்களின் அறிவுரை என்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்?
சர்க்கரை நோயாளிகள் சப்பாத்தி சாப்பிடலாமா
சர்க்கரை நோயாளிகள் பலரும் இரவு நேரங்களில் சப்பாத்தி உண்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். கோதுமை மாவு சப்பாத்தியில் கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை உள்ளதால் இது சர்க்கரை நோயை அதிகப்படுத்தும். மேலும் கோதுமை மாவு கிளைசெமிக் குறியீட்டை கொண்டுள்ளதால் சர்க்கரை நோயை அதிகப்படுத்துவதாக கூறப்படுகிறது.
கோதுமை மாவு சப்பாத்திக்கு பதிலாக ராகி மாவு, பார்லி மாவு, கொண்டைக்கடலை மாவு போன்றவற்றில் சப்பாத்தி அல்லது தோசை செய்து சாப்பிடலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: குட் பேட் அக்லீ படத்தின் இசையமைப்பு பணிகள் தொடக்கம்; ஜிவி பிரகாஷ் அறிவிப்பு.!