விஜய்யுடன் 4வது முறையாக இணையும் பிரபல நடிகை.. உற்சாகத்தில் ரசிகர்கள்!



samantha-pair-with-vijay-in-thalapathi-69-movie

விஜயின் கடைசி திரைப்படம் 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்குப் பிறகு ஒரே ஒரு திரைப்படத்தில் மட்டும் நடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலகி அரசியலில் களமிறங்க உள்ளதாக அறிவித்துள்ளார். 

vijay

விஜய் - H.வினோத் கூட்டணி 

இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தினாலும், அவர் அரசியலில் களமிறங்க உள்ளதால் அவரது ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே விஜயின் கடைசி திரைப்படத்தை அட்லி அல்லது கார்த்திக் சுப்புராஜ் இருவரில் ஒருவர்தான் இயக்க போகிறார் என்ற தகவல்கள் வெளியாகியது.

இதையும் படிங்க: இப்பவே வைப் ஆகுதே.. கோட் திரைப்படத்தின் 3 வது பாடல்.. வெளியீடு அப்டேட் இதோ.!

இந்த  நிலையில், இயக்குனர் சதுரங்க வேட்டை புகழ் இயக்குனர் எச்.வினோத் இயக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இந்த திரைப்படம் முழுக்க முழுக்க அரசியல் கதைக்களம் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது.

vijay

விஜய்க்கு ஜோடியாகும் சமந்தா 

இந்த நிலையில் தளபதி 69 படத்தில் டெஸ்ட் லுக் சமீபத்தில் நடைபெற்றதாகவும், இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாத இறுதியில் தொடங்கும் என கூறப்படுகிறது. மேலும், இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. நடிகை சமந்தா, விஜயுடன் ஏற்கனவே கத்தி, தெறி, மெர்மல் ஆகிய சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தற்போது இந்த ஜோடி 4வது முறையாக இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: விஜய்யின் மகன் படத்தில் குவியும் வாரிசு நட்சத்திரங்கள்? லேட்டஸ்ட் அப்டேட்!