திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
முதன்முறையாக இணையும் பிரபலம்.! சூர்யா 44 பட இசையமைப்பாளர் இவரா?? உற்சாகத்தில் ரசிகர்கள்!!
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. அதற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப்படம் சர்வதேச அளவில் 10 மொழிகளில் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படத்தில் நடிகர் சூர்யா 10ற்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் நடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
சூர்யா 44 படப்பிடிப்பு
தொடர்ந்து நடிகர் சூர்யா அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். சூர்யா 44 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் மற்றும் சூர்யா இருவரும் இணைந்து தயாரிக்கவுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் 17-ம் தேதி துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஜிவி பிரகாஷ் குமாரை இயக்கும் சினிமா விமர்சகர்? அடடே இவரே?
முதன்முறையாக இணையும் இசையமைப்பாளர்
இந்த நிலையில் சூர்யா 44 படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது இப்படத்திற்கு கார்த்திக் சுப்புராஜின் ஆஸ்தான இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை. மேலும் அவ்வாறு நடைபெற்றால் இதுவே சூர்யா மற்றும் சந்தோஷ் நாராயணன் கூட்டணியில் உருவாகும் முதல் படம் என ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு உதவிக்கரம் நீட்டிய ஜி.வி பிரகாஷ் குமார்.!