இனி சிரிப்புக்கு பஞ்சமில்லை.. விஜய் டிவியில் வருகிறது ரசிகர்களின் பேவரைட் ஷோ.! வைரல் வீடியோ!!
ஜாக்பாட் பரிசை வென்ற ஆந்திரா.. ரூ.1.4 இலட்சம் கோடி முதலீடு ஸ்டீல் நிறுவனம்.!
ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அனகாப்பள்ளி மாவட்டத்தில், இரும்பு எக்கு ஆலையை அமைக்க அர்சலர் மிட்டல், நிப்பான் ஸ்டீல் (Arcelor Mittal & Nippon Steel) நிறுவனம் சார்பில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் வாயிலாக அம்மாநிலத்தில் மொத்தமாக ரூ.1.4 இலட்சம் கோடி முதலீடு செய்யப்படுகிறது.
சுமார் 17.8 மில்லியன் டன் எக்கு திட்டத்தை, இரண்டு கட்டமாக தொடங்க இந்நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. அதன்படி, கடலோரம், துறைமுக வசதியை எளிதில் அணுகும் வகையில் இடம் ஒடிசா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் கவனிக்கப்பட்ட நிலையில், ஆந்திரா தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பச்சிளம் பிஞ்சுடா அது.. 3 வயது சிறுமி பலாத்காரம், கொன்று புதைப்பு.. 22 வயது இளைஞன் வெறிச்செயல்.!
பிரம்மாண்ட இரும்பு, எக்கு ஆலை அமைகிறது
இந்த இரண்டு நிறுவனங்களும் கூட்டாக சேர்ந்து ரூ.1.4 இலட்சம் கோடி முதலீடு செய்கிறது. முதற்கட்டமாக ரூ.80 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் நிறுவனம், அடுத்தகட்டமாக ரூ.60 ஆயிரத்தை முதலீடு செய்யும். இதற்காக நிறுவனத்தை அமைக்க, உற்பத்தியை தொடங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அனகாப்பள்ளி மாவட்டத்தில் நக்கப்பள்ளி தாலுகாவில் முதற்கட்டமாக 2600 ஏக்கர் நிலத்தை வழங்க அரசு ஒப்புக்கொண்டுள்ள நிலையில், இரண்டாவது கட்டமாகவும் 2000 ஏக்கர் நிலத்தை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது 1800 ஏக்கர் நிலம் நிறுவனம் பணிகளை தொடங்க தயாராக வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய நிலங்களை மீட்கும் பணிகள் நடக்கின்றன.
இதையும் படிங்க: வெங்காய வெடிகள் வெடித்து இளைஞர் பீஸ்., பீஸாக சிதறி மரணம்; தீபாவளியன்று பயங்கரம்.!