ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
திருப்பதி சென்று வந்த தமிழர்களுக்கு நேர்ந்த சோகம்; பேருந்து விபத்தில் சிக்கி 4 பேர் பலி., 22 பேர் படுகாயம்.!

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டம், கங்காசாகராம் பகுதியில், இன்று நள்ளிரவு நேரத்தில் சுற்றுலா பேருந்து சாலைத்தடுப்பின் மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் & மீட்புப்படையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். காயமடைந்த 22 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டனர்.
கோவிலுக்கு சென்று வந்தவர்களுக்கு சோகம்
விசாரணையில், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தனியார் சுற்றுலா பேருந்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றிருந்த நிலையில், தரிசனத்தை முடித்துவிட்டு ஊருக்கு திரும்பும் வழியில் விபத்து நடந்தது தெரியவந்தது.
இதையும் படிங்க: 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; 14 வயது சிறுவனின் அதிர்ச்சி செயல்.!
சிகிச்சையில் இருப்போர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டு இருக்கின்றனர். சாலையோரம் நின்ற டிப்பர் லாரி மீது மோதாமல் தவிர்க்க, வாகனத்தை திருப்பியபோது, சாலைத்தடுப்பில் மோதி விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
இதையும் படிங்க: தங்கக்கட்டி திருட்டு முயற்சி; கோவிந்தனின் காணிக்கையில் கைவைத்த தற்காலிக ஊழியர் கைது.!