ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
தடுப்பு கம்பியில் விளையாட்டுத்தனம்; 3 வயது சிறுவன் மாடியில் இருந்து தவறி விழுந்து பலி.!

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள திருப்பதி, திருமலை கோவிலுக்கு சீனிவாசலு என்ற நபர் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்ய சென்று இருந்தார். சீனிவாசலுக்கு திருமணம் முடிந்து மனைவி, 3 வயதுடைய சாத்விக் என்ற மகன் இருக்கிறார்.
கம்பியில் விளையாட்டு
இதனிடையே, கடந்த ஜனவரி 15 அன்று தலைமுடி காணிக்கை செலுத்திய குடும்பத்தினரின், 3 வயது சிறுவன் தடுப்பு கம்பி இடைவெளி வழியே நுழைய முற்பட்டார். அப்போது, சிறுவன் எதிர்பாராத விதமாக முதல் மாடியில் இருந்து கீழே விழுந்தார்.
இதையும் படிங்க: திருப்பதி சென்று வந்த தமிழர்களுக்கு நேர்ந்த சோகம்; பேருந்து விபத்தில் சிக்கி 4 பேர் பலி., 22 பேர் படுகாயம்.!
சிறுவன் மரணம்
இந்த சம்பவத்தில் சிறுவன் சாத்விக் படுகாயமடைந்த நிலையில், அவரை உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; 14 வயது சிறுவனின் அதிர்ச்சி செயல்.!