16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; காவலர் கைது.. கரூரில் அதிர்ச்சி சம்பவம்.!



  in Karur Cop Abused 16 Year Old Minor Girl 

சட்டத்தை மதித்து ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவலர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்ட மாநகராட்சிக்குட்பட்ட வங்கபாளையம் பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வரும் காவலர் இளவரசன் (வயது 41). இவர் கரூர் வெங்கமேடு காவல் நிலையத்தில், காவலராக வேலை பார்த்து வருகிறார்.  

இதனிடையே, இளவரசன் தனது வீட்டருகில் வசிக்கும் 11ம் வகுப்பு பயிலும், 16 வயதுடைய பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். கடந்த 6 மாதமாக இந்த செயல் தொடர்ந்தது. 

இதையும் படிங்க: 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; 14 வயது சிறுவனின் அதிர்ச்சி செயல்.!

sexual torture

காவலர் கைது

இதனிடையே, சிறுமி தனது தாயாரிடம் இளவரசனின் செயல்பாடுகள் குறித்து கூறி இருக்கிறார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், வெங்கமேடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இதுதொடர்பான புகாரை ஏற்று விசாரணை நடத்திய போலீசார், காவலருக்கு எதிரான குற்றசாட்டுகளை உறுதி செய்தனர். இதையடுத்து, இன்று இளவரசன் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

இதையும் படிங்க: 14 வயது சிறுமி பலாத்காரம்; வளர்ப்பு தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை.!