மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு; ரூ.20 இலட்சம் நிதிஉதவி வழங்கிய விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி.!
கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம், அட்டமலை, சூரல்மலை, முண்டகை ஆகிய கிராமங்களை நிலம் சரிந்து புதைத்ததால் தற்போது வரை 317 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இன்னும் 200 பேரின் நிலை தெரியவில்லை என்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
36 மணிநேர உழைப்புக்கு பின்னர் இராணுவம் தற்காலிக பாலம் ஒன்றை ஆற்றை கடக்க அமைத்துள்ளது. அதன் வழியாக மருத்துவ உபகரணங்கள் மற்றும் முதலுதவி பொருட்கள் எடுத்து செல்லப்படுகின்றன. மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பேரிடரை எதிர்கொள்ள அரசுக்கு மக்கள் நிதிஉதவி அளித்து உதவுமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: சோகத்தின் உச்சம்... நூடுல்ஸ் ஆல் பறிபோன உயிர்.!! 8 வயது சிறுமி பரிதாப பலி.!!
திரை பிரபலங்களில் நயன்தாரா - விக்னேஷ் சிவனும் நிதிஉதவி
அதன்படி தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.5 கோடி நிதிஉதவி வழங்கப்பட்ட நிலையில், நடிகர் விக்ரம் ரூ.20 இலட்சம், ராஷ்மிகா ரூ.10 இலட்சம், சூர்யா, ஜோதிகா, கார்த்திக் சார்பில் ரூ.50 இலட்சம் நிதிஉதவி வழங்கப்பட்டது. இவை நேரடியாக வயநாடு மீட்பு பணிகளுக்கு செலவிடப்படும்.
இந்நிலையில், நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதி, தங்களின் சார்பில் வயநாடு நிலச்சரிவுக்காக கேரளா மாநில முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.20 இலட்சம் வழங்கியுள்ளனர். தம்பதிகளின் இச்செயல் பாராட்டுகளை குவித்து வருகிறது.
இதையும் படிங்க: இளைஞர்களின் கையில் திடீரென வெடித்து சிதறிய ஸ்மார்ட்போன்; பகீர் சம்பவம்.!