#BigBreaking: நாடே அதிர்ச்சி.. தேசியவாத காங்கிரஸ் தலைவர் பாபா சித்திக் சுட்டுக்கொலை.. மஹாராஷ்டிராவில் பதற்றம்.!



NCP Leader Baba Siddique Shot Dead in mumbai 

 

மராட்டிய மாநிலத்தை பதற்றத்திற்குள்ளாகும் சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, பாத்ரா கிழக்கு பகுதியில், தேசியவாத காங்கிரஸ் (NCP Party) கட்சியின் மூத்த தலைவர் பாபா சித்திக் மகன் ஸிஷன் அலுவலகம் உள்ளது.  இன்று சித்திக் தனது மகனின் அலுவலகத்தில் வெளியே நின்றபோது, அங்கு வந்த மூன்று பேர் கும்பலால் அவர் சுடப்பட்டார். 

இதையும் படிங்க: பீகாரில் கம்பெனி ஆரம்பித்ததுதான் வாழ்க்கையின் மோசமான முடிவு; நிறுவனர் புலம்பல்.. காரணம் என்ன?.! 

இதனால் படுகாயமடைந்தவர், உடனடியாக மீட்கப்பட்டு லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். இதனிடையே, அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, அம்மாநிலத்தில் பதற்ற சூழல் உண்டாகியுள்ளது. 

மூன்று முறை துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை

துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக ஹரியானா, உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்றாவது நபருக்கு அதிகாரிகள் வலைவீசி இருக்கின்றனர். இவர்கள் எதற்காக சித்திக்கை கொலை செய்தனர் என விசாரணை நடந்து வருகிறது.

இளையவயதில் காங்கிரசில் இணைந்து அரசியல் பணியை தொடங்கியவர், பின் சரத் பவருடன் இணைந்து தேசியவாத காங்கிரசில் உழைத்து வந்தார். கடந்த 48 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் அரசியல் பணியை மேற்கொண்டு இருந்த நிலையில், இன்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தால் அங்கு அரசியல் பரபரப்பு சூழல் உண்டாகியுள்ள நிலையில், பல இடங்களில் பாதுகாப்பு கருதி காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

களத்தில் இருந்து வீடியோ

இதையும் படிங்க: கால்வாய்க்குள் பாய்ந்த கார்; துரிதமாக செயல்பட்டு தந்தை-மகளை மீட்ட இளைஞர்.. குவியும் பாராட்டுக்கள்.!