பக்ரீத் அன்று ரத்தம் தெறிக்கும்.. சர்ச்சை வீடியோ வெளியிட்ட இளைஞர்.. கர்ஜனையும், கதறலும்..!



UP Muzaffarnagar Youth Social Media Video on Eid Bloodsheed 

 

சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் அதிகரித்ததில் இருந்து, அதனை தவறாக மற்றும் மிகுந்த உணவுபூர்வமாக பயன்படுத்துவோரின் செயல்கள் அதிகரித்து வருகின்றன. இவை சில நேரம் பார்வையாளர்களின் கவனத்தை அடையும், ஒருசிலது தவறான நடவடிக்கையால் கண்டனத்தையும் பெரும். 

சர்ச்சை வீடியோ வைரல்

உத்திரபிரதேசம் மாநிலத்தில் முசாபர்நகர் மாவட்டத்தில் வைசத்து வரும் இளைஞர் அர்ஹான் அன்சாரி, தனது சமூக வலைதளப்பக்கத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பக்ரீத் இரத்தம் தெறிக்க வேண்டும், ரத்த கிளறியாக இருக்க வேண்டும் என சர்ச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி வீடியோ வெளியிட்டார். 

இதையும் படிங்க: அலட்சியத்தால் நொடியில் நடந்த பதைபதைப்பு விபத்து; பதறவைக்கும் வீடியோ.!

இந்த வீடியோ வைரலாகி அங்குள்ள வட்டாரங்களில் பரபரப்பை உண்டாக்கவே, முசாபர்நகர் காவல் துறையினர் இளைஞரை கைது செய்து சிறப்பு கவனிப்பை வெளிப்படுத்தினர். அதனைத்தொடர்ந்து, இளைஞர் தனது செயல்பாட்டுக்கு மன்னிப்பு கேட்டு, இதுபோன்ற தவறுகளை யாரும் செய்ய கூடாது என பிறருக்கும் அறிவுரை கூறி இருக்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. 
 

இதையும் படிங்க: அண்ணியை கரம்பிடித்த கொழுந்தன்; ஆத்திரத்தில் சொந்த தம்பியை போட்டுத்தள்ளிய பாசக்கார சகோதரர்கள்.!