"கோழைகளே... கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.." ஜிபியு விமர்சனம்.!! நடிகை திரிஷா பதிலடி.!!
வாங்களேன் ட்ரெயின் ட்ரைவர் கூட பேசிட்டே போலாம்.. பயணிகளின் ஷாக் செயல்., அதிரடி காட்டிய ஆர்பிஎப்.!

இரயில் எஞ்சினில் பயணிகள் அமர்ந்து பயணிக்க முற்பட்ட சம்பவம் வாரணாசியில் நடந்துள்ளது.
உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ப்ரயாக்ராஜ் மாவட்டத்தில், திரிவேணி சங்கமம் திருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் புண்ணிய நதிகளாக கருதப்படும் கங்கை, யமுனையில் பக்தர்கள் நீராடி வழிபாடு செய்தனர்.
இதையும் படிங்க: ஒரு நொடி நின்று வந்திருக்கலாமே.. 5 வயது சிறுவனுக்கு இப்படியா மரணம் வரணும்? பதறவைக்கும் வீடியோ.!
பக்தர்களின் வசதிக்கு தேவையான ஏற்பாடுகளை மாநில அரசு மேற்கொண்டது. எனினும், சில குளறுபடி காரணமாக கூட்ட நெரிசல், தீ விபத்துகள் போன்றவையும் நிகழ்ந்தது.
இதனிடையே, திரிவேணி சங்கமத்தில் மொத்தமாக 41 கோடி மக்கள் பங்கேற்றதாக புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளன. திரிவேணி சங்கமத்திற்கு சென்றிருந்த ஆன்மீக சுற்றுலா பயணிகள் பலரும் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர்.
वाराणसी में ट्रेन के इंजन पर यात्रियों ने किया कब्जा
— NBT Hindi News (@NavbharatTimes) February 9, 2025
वाराणसी में भारी भीड़ के कारण महाकुंभ स्पेशल ट्रेन के इंजन में चढ़े यात्री, पायलट को बैठने की जगह नहीं अंदर से दरवाजा किया बंद फिर RPF जवान ने निकाला बाहर.#varanasi #Train #viralvideo pic.twitter.com/h93bbXD8xX
இந்நிலையில், இரயில்களில் பயணிகள் முண்டியடித்து ஏறி கூட்ட நெரிசல் நிலவும் நிலையில், இரயில் ஓட்டுனரின் அறைக்குள் பயணிகள் ஏறி அமர்ந்த சம்பவம் வாரணாசியில் நடந்துள்ளது.
இதனால் காவல்துறையினர் உடனடியாக நிகழ்விடத்திற்கு வரவழைக்கப்பட்டு, பயணிகள் இரயில் எஞ்சின் பெட்டியில் இருந்து இறக்கிவிடப்பட்டனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
இதையும் படிங்க: ரயில் பயணத்தில் டீ வாங்கி குடிக்கிறீங்களா? கொஞ்சம் இந்த வீடியோவை பார்த்துட்டு முடிவு பண்ணுங்க பிளீஸ்.!