தினமும் தலைக்கு குளிப்பது இவ்வளவு ஆபத்தா.? மருத்துவர்கள் அறிவுரை என்ன.!?



Doctors adviced about should not bath daily

தலைக்கு குளிப்பதால் ஏற்படும் மாற்றங்கள் 

பொதுவாக பலரும் தினமும் எழுந்து பல் துலக்கி விட்டு காலையில் குளிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறோம். மனிதர்களின் சுகாதாரமான மற்றும் நாகரீகமான பழக்கங்களில் ஒன்றாக கருதப்படும் குளியல், தினமும் செய்வது நம் உடலை மிகவும் சுத்தமாக வைத்திருக்கிறது. ஆனால் தினமும் குளிப்பது பல ஆபத்துகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இது குறித்து பதிவில் விளக்கமாக பார்க்கலாம்

bathing

தினமும் குளிப்பதால் ஏற்படும் நோய்கள்

​​​​​​​​​​

இதன்படி ஒரு நாள் முழுவதும் வெளியில் சுற்றிவிட்டு களைப்புடன் இரவில் உறங்கி விடுவோம். பின்பு அடுத்த நாள் காலையில் எழுந்து குளிப்பது பல நன்மைகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக தலையில் உள்ள அழுக்குகள், உடலில் உள்ள வியர்வைகள், துர்நாற்றங்களை குளிப்பதன் மூலமாக எளிதில் நீக்கலாம். வேர்வையிலிருந்து வெளியேறும் பாக்டீரியாக்களை தடுப்பதற்கு குளியல் செய்வது மிகவும் அவசியம்.

இதையும் படிங்க: குடி பழக்கத்தை ஒரே வாரத்தில் நிறுத்த வைக்கும் நாட்டு வைத்திய கசாயம்.! 100% தீர்வு.!?

bathing

மருத்துவர்களின் அறிவுரை

ஆனால் தினமும் தலைக்கு குளிக்க கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இதனால் முடி இழக்கும் அபாயம் ஏற்படும். மேலும் முடியின் அடர்த்தி குறையும். ஒரு சிலருக்கு தலையில் அரிப்பு, பொடுகு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். நம் தலையில் உள்ள இயற்கையான எண்ணெய் பசை போன்ற திரவம் நீங்கி தலை வறட்சியுடன் காணப்படும். மேலும் ஆஸ்துமா, சைனஸ் போன்ற பிரச்சனை இருப்பவர்கள் தினமும் தலைக்கு குளிக்கும்போது இந்த பிரச்சனையின் தீவிரம் அதிகரிக்கும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: செரிமான பிரச்சனை முதல்.. உடல் எடை அதிகமாவது வரை.! பல நோய்களை தீர்க்கும் நெல்லிக்காய் ஜூஸ்.!?