முடி உதிர்வதால் கவலையா.? கூந்தல் ஆரோக்கியத்தில் உதவும் வெந்தய எண்ணெய்.!!



fenugreek-oil-benefits-in-hair-growth

இன்றைய காலகட்டத்தில் முடி உதிர்வது என்பது மிக பெரிய பிரச்சனையாக இருக்கிறது. சரியாக தலை முடியை பராமரிக்காததாலும் சுற்றுப்புறச் சூழல் காரணிகள் மற்றும் தூசி போன்றவை முடி உதிர காரணமாக அமைகிறது. கூந்தல் உதிர்வதை தவிர்ப்பதற்கு வெந்தய  எண்ணெய் ஒரு சிறந்த மருந்தாகும். இந்த வெந்தய எண்ணெயை வீட்டிலேயே எவ்வாறு செய்யலாம் என்று பார்க்கலாம்.

வெந்தயத்தின் நன்மைகள்

வெந்தயத்தில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் சபோனின்கள் நிறைந்திருக்கிறது. இவை பூஞ்சை மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்டவை. இவை கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது. மேலும் வெந்தயத்தில் உள்ள நிக்கோட்டினிக் அமிலம் புரதத்துடன் சேர்ந்து பொடுகு தொல்லையை கட்டுப்படுத்துவதோடு கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது.

Life style

வெந்தய எண்ணெய் தயாரிப்பது எப்படி.?

அரை கப் வெந்தயத்தை கண்ணாடி பாட்டிலில் போட்டு அதனுடன் நமக்கு விருப்பமான எண்ணெயை வெந்தயம் முழுவதுமாக மூழ்கி இருக்குமாறு பாட்டிலில் உற்ற வேண்டும். இப்போது பாட்டிலை நன்றாக மூடி 4 முதல் 6 வாரங்கள் வரை வைத்திருக்க வேண்டும். மேலும் ஒரு நாளைக்கு ஒருமுறை வெந்தயம் முழுவதும் எண்ணெயில் நன்றாக கலக்குமாறு பாட்டிலை நன்றாக குலுக்கி வைக்க வேண்டும்.

இதையும் படிங்க: ஏசி அறையில் அதிக நேரம் செலவிடுபவரா நீங்கள்.? இந்தப் பிரச்சினைகள் உங்களை தாக்கலாம்.!!

வெந்தய எண்ணெய் பயன்படுத்தும் முறை

6 வாரங்கள் கழித்து மூடியை திறந்த பின் வடிகட்டி எடுத்தால் வெந்தய எண்ணெய் ரெடி. இந்த எண்ணெயை மற்றொரு பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளவும். இதனை 2 அல்லது 3 வாரங்களுக்கு பயன்படுத்தி வர கூந்தல் வளர்ச்சியில் நல்ல மாற்றம் இருக்கும்.

இதையும் படிங்க: யம்மி... சுவையான மின்ட் லஸ்ஸி வீட்டிலேயே செய்வது எப்படி.? எளிமையான ரெசிபி.!!