மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அரிசிக்கு பதில் இதை சேர்த்து இட்லி மாவு அரைச்சி பாருங்க.. வேற லெவல்ல இருக்கும்.!
இட்லி மாவு அரைக்கும் பொழுது அதில் அரிசிக்கு பதில் இந்த ஒரு பொருளை சேர்த்தால் அதிகப்படியான இட்லிகளை நாம் சமைக்க முடியும். அது என்னவென்று பார்க்கலாம் வாங்க.
ஆரோக்கியமான உணவு இட்லி :
வீட்டில் இருக்கும் தானிய வகைகளை கொண்டு நாம் சத்து நிறைந்த உணவுகளை செய்து சாப்பிடுவோம். அப்படி சாப்பிடும் போது அதிகப்படியாக நாம் வீட்டில் எடுத்துக் கொள்ளக்கூடிய ஒரு உணவு இட்லி. இதில் அரிசி மற்றும் உளுந்து கலந்து மாவாக அரைத்து அதை இட்லியாக வார்த்து சாப்பிடுவது வழக்கம்.
பார்லி இட்லி :
இந்த இட்லி மாவில் வேறு என்ன சேர்த்தால் அதன் பலன் அதிகரிக்கும் என்பதை பார்க்கலாம். ஆவியில் வேகவைத்து உண்பதால் இதில் கொழுப்புகள் எதுவும் இல்லை. எனவே இட்லி மிகவும் ஆரோக்கியமான உணவு. பார்லி அனைவருக்கும் தெரிந்த ஒரு தானியம் தான். அரிசிக்கு பதில் இதை நாம் உளுந்துடன் சேர்த்து மாவாக அரைத்து அதில் இட்லி செய்து சாப்பிட்டால் உடலில் நல்ல பலன்களை இது கொடுக்கும்.
இதையும் படிங்க: "குளிருக்கு இதமாக காரசாரமான பெப்பர் இட்லி ட்ரை பண்ணலாம் வாங்க!"
மாரடைப்பை தடுக்கும் :
கொலஸ்ட்ரால் அதிகரிப்பதுடன் இதய பிரச்சினைகள் வரவிடாமல் இது தடுக்கிறது. மேலும், சாதாரண அரிசி, உளுந்து சேர்த்து செய்யும் இட்லி மாவில் ஒரு கரண்டி சேர்த்தால் தான் ஒரு இட்லி வரும். ஆனால், இந்த பார்லி இட்லி மாவில் அரை கரண்டி மாவு ஊற்றினாலே ஒரு இட்லி அளவுக்கு பெரிதாக வரும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது :
சர்க்கரை நோயாளிகள் இந்த உணவை அதிகப்படியாக சாப்பிடுவது உடலுக்கு நல்லது. இதில் மைக்ரோ நியூட்ரிஷியன்கள் இருப்பதால் இது மாரடைப்பு மற்றும் இதய நோய்களுக்கான ஆபத்தை குறைக்கிறது. மேலும், இந்த இட்லி மாவு மிகவும் பொலிவுடன் காணப்படுவதால் இட்லியும் நன்றாக புசுபுசுவென இருக்கும்.
இதையும் படிங்க: சுவையான கோதுமை ரவை இட்லி எப்பிடி செய்யணும் தெரியுமா.?