"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
திருமணத்திற்கு ஜாதகம் பாக்குறீங்களா.? இந்த தோஷம் இருந்தால் கூட வரன் தள்ளிப் போகும்.!?
தற்போது உள்ள காலகட்டத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் என ஏராளமானோர் திருமணவயதை தாண்டியும் திருமணத்திற்காக சரியான வரன் கிடைக்காமல் காத்துக் கொண்டிருக்கின்றனர். பொதுவாக திருமணத்திற்கு ஜாதகம் பார்க்கும் போது ஒரு சில தோஷங்கள் இருப்பதால் திருமண வரன் தள்ளி போகும். குறிப்பாக புணர்பூ தோஷம் ஜாதகத்தில் உள்ளதா என்பதை கட்டாயமாக பார்க்க வேண்டும்.
புணர்பூ
தோஷம் என்றால் என்ன
ஜாதகத்தில் சந்திரனும், சனியும் ஒன்று சேர்ந்து இருப்பது, சனியின் பார்வை சந்திரனில் இருப்பது, சந்திரன் மற்றும் சனி இருவரும் ஒரே அதிபதியின் நட்சத்திரத்தில் பயணிப்பது போன்றவை தான் புணர்பூ தோஷம் ஆகும். புணர்பூ தோஷத்தினால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விளக்கமாக பார்க்கலாம்.
இதையும் படிங்க: வீட்டில் பண வரவு பெருக, குபேர விளக்கு பூஜையை கண்டிப்பாக செய்து பாருங்கள்.!?
புணர்பூ
தோஷத்தினால் ஏற்படும் பிரச்சனைகள்1. புணர்பூ தோஷ ஜாதகக்காரர்களுக்கு திருமணத்தில் தடை ஏற்படும்.
2. பெண் வீட்டார் மற்றும் மாப்பிள்ளை வீட்டார் என இருவரது விட்டாரிடமும் திருமணத்தை குறித்து பேச்சு வார்த்தை நல்லபடியாக நடந்தாலும் திடீரென்று திருமண பேச்சு தடைபடும்.
3. திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்டாலும் திருமண தேதி தள்ளிப் போகும்.
4. திருமணத்திற்கு அல்லது நிச்சயதார்த்தத்திற்கு செல்லும் வழியில் அசவுகரியங்கள் ஏற்படும்.
5. திருமணத்திற்கு பிறகு கணவன் மனைவியில் யாராவது ஒருவருக்கு தீராத நோய்வாய்ப்படுவர்.
6. திருமணம் முடிந்த பின்பு இதுவரை யாராவது ஒருவர் பிரிந்து விடும் அளவிற்கு பிரச்சனை நிகழும்.
பரிகாரங்கள்
திருமணஞ்சேரி சென்று பரிகாரம் செய்து வந்தால் இந்த தோஷத்திலிருந்து விடுபடலாம் அல்லது குலதெய்வ கோயிலுக்கு அடிக்கடி சென்று வருவது நல்லது. முடி காணிக்கை செலுத்துவது, மூன்று பௌர்ணமிகள் தொடர்ந்து விரதம் இருந்து திருவண்ணாமலை சென்று ஒன்பது துறவிகளுக்கு வஸ்திர தானம் செய்வது போன்றவற்றை செய்துவர புணர்பூ தோஷத்திலிருந்து விடுபடலாம்.
இதையும் படிங்க: சாணக்கிய நீதிபடி இந்த குணங்களைக் கொண்ட ஆண்களை தான் பெண்களுக்கு ரொம்ப பிடிக்கும் தெரியுமா.!?