"கலைஞர் இருந்தவரை முடிந்ததா?... ஒருத்தர் குமரியில ஷூட்டிங் நடத்துறார்" - பிரதமரை கடிந்த பிரகாஷ் ராஜ்.!
சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலை மண்டத்தில், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சியை நடிகர் பிரகாஷ் ராஜ் திறந்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "கலைஞர் கருணாநிதி இருந்திருந்தால், இன்று நான் பேசவேண்டிய அவசியம் என்பது வந்திருக்காது. அவர் இருக்கும் வரை யாரையும் வாலாட்ட முடியவில்லை.
இதையும் படிங்க: #Breaking: மாணவர்களுக்கான புதிய சேமிப்புக்கணக்கு.. பள்ளிக்கல்வித்துறை அசத்தல் செயல்... விபரம் உள்ளே.!
கொள்கைக்காக அரசியல் செய்தவர் கலைஞர்
கலைஞர் இல்லை எனில் நான் ஐஏஎஸ் ஆகியிருக்க முடியாது என ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் என்னிடம் கூறினார். சாதி, பணம் வைத்து அரசியல் செய்வது வேறு. கலைஞர் கொள்கையை வைத்து அரசியல் செய்தார்.
கலைஞர் இருந்தார் என்ற செய்தியை காட்டிலும், அவர் எதற்காக கலைஞர் ஆனார்? என்பதே முக்கியம். நான் பல ஷூட்டிங்கில் மக்கள் வருவதை பார்த்து இருக்கிறேன். ஆனால், குமரியில் பிரதமர் மோடியே ஷூட்டிங்கு பார்வையாளர்களை அழைத்து செல்கிறார்" என கூறினார்.
இதையும் படிங்க: "இந்தியாவுக்கே புதிய விடியல்.. இன்னும் 3 நாட்கள் தான்" - முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிவிப்பு..!