#Breaking: மாணவர்களுக்கான புதிய சேமிப்புக்கணக்கு.. பள்ளிக்கல்வித்துறை அசத்தல் செயல்... விபரம் உள்ளே.!



tn-educational-department-announce-post-office-bank-acc

 

2024 - 2025ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை விறுவிறுப்பு பெற்றுள்ளது. தமிழ்நாடு மாநில பள்ளி கல்வித்திட்டத்தின் கீழ் பயில வரும் மாணவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு மேற்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வங்கிகளில் சேமிப்பு கணக்குகள் தொடங்கப்படுகின்றன. இதன் வாயிலாக மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை நேரடியாக வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. 

இதையும் படிங்க: "இந்தியாவுக்கே புதிய விடியல்.. இன்னும் 3 நாட்கள் தான்" - முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிவிப்பு..!

இந்நிலையில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சேமிப்பு கணக்குகளை தொடங்கி, தமிழ்நாடு அஞ்சல் துறையுடன் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. 

அஞ்சலக கணக்காக தொடக்கம்

மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை நேரடியாக வங்கிக்கணக்கில் வரவு வைக்க, வங்கிகளில் புதிய கணக்கை தொடங்க பல ஆவணங்கள் கேட்கப்பட்டு இழுத்தடிக்கபட்டன. 

இதுகுறித்து எழுந்த புகாரின் பேரில் தற்போது பள்ளிக்கல்வித்துறை, மாணவர்களுக்கான வங்கிக்கணக்கை அஞ்சலக சேமிப்பு கணக்காக தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்த ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: தலைநகரை உலுக்கியெடுத்த வெப்பம்; கொதிகொதிக்கும் சென்னையால் வறுபடும் மக்கள்.!