#Breaking: முட்டுக்காடு பகுதியில் நடந்தது என்ன? பெண்களின் காரை மறித்தது யார்? - காவல்துறை பரபரப்பு விளக்கம்.! 



Chennai Muttukadu Car Block Case Police Investigation 

 

நள்ளிரவு நேரத்தில் பெண்களின் காரை இளைஞர்கள் கும்பல் மறித்த விவகாரத்தில், காவல்துறை புதிய விளக்கம் அளித்துள்ளது.

சென்னை முட்டுக்காடு பகுதியில், ஜனவரி 25 அன்று நள்ளிரவு நேரத்தில், கட்சிக்கொடி ஒன்று கட்டப்பட்ட காரில் வந்த 8 பேர் கொண்ட கும்பல், 3 பெண்கள் & கைக்குழந்தை பயணித்த காரை துரத்தி அச்சுறுத்தலில் ஈடுபட்டது. இந்த சம்பவம் குறித்து கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், வீடியோ அரசியல் கட்சியினரால் வெளியிடப்பட்டு, அரசுக்கு எதிராக கண்டனம் குவிந்து வந்தது. மேலும், பெண்ணுக்கு 

இதையும் படிங்க: நடுரோட்டில் காரை மறித்து பெண்களை துரத்திய இளைஞர்கள்.! கைக்குழந்தையுடன் பதறிய சென்னை பெண்கள்.!!

கார் உரசியது

இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணியளவில், ஈசிஆர் முட்டுக்காடு பகுதியில், கோவளம் கடற்கரை ஓரத்தில் இளைஞர்கள் காரை நிறுத்தி வைத்திருந்த நிலையில், இளைஞர்களின் கார் மீது பெண்களின் கார் உரசியுள்ளது. பெண்களின் காரில் பயணம் செய்தவர்கள், எந்த விதமான விஷயத்தையும் கூறாமல், காரை உரசியதுகூட தெரியாமல் சென்றுவிட்டனர். 

8 பேரை கைது செய்ய நடவடிக்கை

லேசாக மற்றொரு காரை உரசியதால், பெண்களிடம் பேச இளைஞர்கள் காரை துரத்தி வந்தனர். அப்போது, பின்னால் வரும் நபர்கள் குறித்து தெரியாமல் பெண்கள் வீடியோ எடுத்துள்ளனர். பெண்களை துரத்தி சென்றதாக, இச்செயலில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்ட்டுள்ளது. பெண்கள் தங்களின் காரை உரசிய காரணத்தால், பெண்கள் பயணித்த காரை இளைஞர்கள் துரத்தி இருக்கின்றனர் என காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 


 

இதையும் படிங்க: சென்னை: கலிகாலத்தின் உச்சம்.. 12, 14, 16 வயது சிறுமிகள் அக்யுஸ்ட் கேடிகளுடன் காதல்., பலாத்காரம்..!