சென்னை: பெண்களின் கார் துரத்தப்பட்ட விவகாரம்; சிக்கிய கல்லூரி மாணவர்கள் கூட்டம்.. ஒருவர் கைது.!



  Chennai Muttukadu Car Chase Case 1 Arrested by Cops 

சென்னையில் உள்ள முட்டுக்காடு பகுதிக்கு, கடந்த சில நாட்களுக்கு முன்பு கானாத்தூர் பகுதியைச் சேர்ந்த பெண்கள் குழு கடற்கரைக்கு சென்று இருந்தது. பின் மீண்டும் அவர்கள் வீட்டிற்கு வந்துகொண்டு இருந்தபோது, இவர்களை இரண்டு காரில் வந்த கும்பல் துரத்தியது. இதுதொடர்பாக கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மேலும், வீடியோ ஆதாரத்துடன் வெளியான தகவலால், எதிர்க்கட்சிகள் ஆளும் அரசுக்கு எதிராக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கோரிக்கையும் முன்வைத்தனர்.

இந்நிலையில், பெண்களை துரத்திய விவகாரத்தில், முதற்கட்டமாக சந்துரு என்ற நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக 2 தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், தனிப்படை காவல்துறையினர் சந்துருவை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து கிழக்கு தாம்பரம், பொத்தேரி பகுதியில் இருந்த இரண்டு கார் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் கல்லூரி மாணவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: #Breaking: முட்டுக்காடு பகுதியில் நடந்தது என்ன? பெண்களின் காரை மறித்தது யார்? - காவல்துறை பரபரப்பு விளக்கம்.! 

பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் சந்துரு கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவருடன் சம்பவத்தின் போது இருந்தவர்கள் குறித்து விசாரித்து, அவர்களையும் கைது செய்ய அதிகாரிகள் திட்டமிட்டு இருக்கின்றனர்.

இதையும் படிங்க: நடுரோட்டில் காரை மறித்து பெண்களை துரத்திய இளைஞர்கள்.! கைக்குழந்தையுடன் பதறிய சென்னை பெண்கள்.!!