ஊருக்குத்தான் உபதேசமா? குலம், கோத்திரத்துடன் துரை வைகோ மகள் திருமணப்பத்திரிகை; பாஜக நிர்வாகி கேள்வி.!



Durai Vaiko Daughter Marriage Invitation with Ancient Method TN BJP Blames it 

 

திருச்சி லோக் சபா தொகுதியின் எம்.பி., மறுமலர்ச்சி முன்னேற்ற திராவிட கழகத்தின் பொதுச்செயலாளருமானவர் துரை வைகோ. இவரின் மகள் வானதி ரேணு. இவருக்கும், விருதுநகரை சேர்ந்த கோகுல கிருஷ்ணன் என்பவருக்கும் இடையே திருமணம் செய்ய பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டது. 

இருவரின் திருமணமும் வரும் நவம்பர் மாதம் 07ம் தேதி அன்று சென்னை திருவேற்காடு பகுதியில் இருக்கும் மண்டபத்தில் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு துரை வைகோ பலருக்கும் நேரில் சென்று தனது பத்திரிகையை வழங்கி வருகிறார்.  

இதையும் படிங்க: வீழ்ந்தால் எழும் வரை போராடு; சிறுவனின் தெறிக்கவிடும் வீடியோ.. அனல்பறக்கும் காட்சிகள்.!

இதனிடையே, துரை வைகோவின் மகள் பத்திரிகையில், அவர்கள் சார்ந்த குலம், கோத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது. மதிமுக முற்போக்கு சிந்தனை கொண்ட இடதுசாரி இயக்கம் ஆகும். இதனால் அவர்களின் முக்கிய பொறுப்பாளர் வீட்டில் நடக்கும் பத்திரிகையில் குலம், கோத்திரம் எப்படி வந்தது? என கேள்வி எழுப்பியுள்ள நெட்டிசன்கள், அதனை சமூக வலைத்தளத்தில் கேள்வியாக எழுப்பி பகிர்ந்து வருகின்றனர். 

பாஜகவை சேர்ந்த நிர்வாகி ஒருவர், தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் இதனை இட்டுள்ளார். மேலும், அதனை மேற்கோளிட்டுள்ள சக்திவேல் என்பவர், "அரசியலில் பெரியார் வழி. குடும்பத்தில் பெரியோர் வழி. அரசியல்வாதிகள் ஊருக்கு மட்டும் தான் உபதேசம் செய்வார்கள்" என கருத்தும் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: மிளகாய்பொடித்தூவி கொத்தனாரின் கதையை முடித்த கும்பல்; மதுரையில் கொடூரம்.!