சிறகடிக்க ஆசை.. சர்ச்சை நாயகிக்கு, ஹீரோயின் வாய்ப்பு.. ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சுருதி நாராயணன்.!
பெரம்பலூர்: கைதுக்கு பயந்து தலைமறைவான கிராமத்து ஆண்கள்.. போராட்டத்தில் ஆவேசம், வழக்கால் பரிதவிப்பு.!

போராட்டத்தின்போது கல்வீசி தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதால், கைது நடவடிக்கைக்கு அஞ்சி பலரும் கிராமத்தில் இருந்து வெளியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை, கைகளத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் மோகன். இவரின் மனைவி செல்வி. தம்பதிகளுக்கு மணிகண்டன் என்ற மகன் இருக்கிறார். இதே கிராமத்தில் வசித்து வருபவர் தேவேந்திரன். தேவேந்திரனுக்கும் - மணிகண்டனுக்கு இடையே, நெல் அறுவை இயந்திரம் தொடர்பாக முன்விரோதம் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: #பெரம்பலூர்: ரூ.15,90,000 லட்சம்.. ஏமாந்த பெண்.. ஆன்லைன் பழக்கத்தால் ஏற்பட்ட விபரீதம்.!
இதற்கு சமாதானம் பேச, தலைமை காவலர் ஸ்ரீதர் என்பவர், இருவரையும் நெல் அறுவடை இயந்திரத்தின் உரிமையாளர் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தேவேந்திரன் மணிகண்டனை வெட்டிக்கொலை செய்தார். இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்ற நிலையில், இந்த கொலை சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கியது. மேலும், வழக்கு விசாரணைக்கு பின்னர், காவலர் ஸ்ரீதரின் மீது எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
குற்றவாளி கைது
காவல் உதவி ஆய்வாளர் உட்பட 4 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மணிகண்டனை இழந்த விரக்தியில், அவரின் உடலோடு கைகளத்தூர் காவல் நிலையம் வந்திருந்த 100 க்கும் மேற்பட்டோர், திடீரென காவல் நிலையத்தில் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் கூடுதல் காவல் துறையினரும் அங்கு குவிக்கப்பட்டனர். தேவேந்திரன் சம்பவத்தின்போதே கைது செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கல் வீசியவர்களை தேடுகின்றனர்
இந்நிலையில், கைகளத்தூர் காவல் நிலையத்தில் கல்வீசி தாக்குதல் நடப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தி, மொத்தமாக 109 பேரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்குப்பதிவு செய்யப்பட்ட நபர்களில் சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், எஞ்சியோர் கைது செய்யப்படவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் கைது நடவடிக்கைக்கு பயந்துபோன கிராமத்து ஆண்கள், கிராமத்தை விட்டு வெளியேறி தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. அவர்களை கண்டறியும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
தனது கிராமத்து நபரை இழந்த ஆத்திரத்தில் அதிகாரிகளிடம் சரியான வழியில் வாதம் செய்து முறையிடலாம் எனினும், ஆவேசத்தில் பொதுச்சொத்துக்கள், தனியார் சொத்துக்களை சேதப்படுத்தினால், கூட்டம் கலைந்த பின்னர் வழக்கை எதிர்கொள்ள நேரிடும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பெரம்பலூரில் நடந்தது சாதிய கொலையா? பதற்றத்தை தந்த தகவல்.. எஸ்.பி கொடுத்த விளக்கம்.!