மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: "ஆட்சியில் பங்கு" - தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர் முக ஸ்டாலினுக்கு பரபரப்பு கடிதம்.!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி, வி.சாலை பகுதியில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கொள்கை அறிவிப்பு மாநாட்டில், இறுதியாக நடிகர் விஜய் பேசும்போது, தங்களுடன் கூட்டணி அமைத்து அரசியல் பயணத்தை தொடர விரும்பும் கட்சிக்கு, ஆட்சியில் உரிய மரியாதை மற்றும் பங்கு வழங்கப்படும் என அறிவித்து இருந்தார்.
விசிக-வின் அடிப்படை கொள்கை
ஏற்கனவே தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் திமுக தலைமையிலான தனிப்பெரும்பான்மை அரசில், விசிக தலைமை பலமுறை ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை முன்வைத்து வந்தது. பின் திமுக தரப்பில் மறைமுகமாக எதிர்ப்புக்கருத்து வந்ததும், அந்த பதிவுகளை நீக்கி அமைதியான சம்பவம் நடைபெற்றது.
இதையும் படிங்க: திமுகவை விளாசி அனல்பறந்த பேச்சு; நடிகர் போஸ் வெங்கட் காட்டம்..! விஜய்-க்கு எதிராக குரல்.!
காங்கிரஸ் தரப்பில் கோரிக்கை
இந்நிலையில், காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் சரவணன், தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ஆட்சியில் பங்கு வழங்கி, அமைச்சரவையில் காங்கிரசுக்கு இடமளித்து தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி மலருவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
நேற்று விஜய் மாநாட்டில் பேசிய பல பேச்சுக்கள் நேரடியாக திமுக, பாஜகவின் மதவாத, பிரிவினை வாத, ஊழல்வாத அரசியலை எதிர்த்து தாக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாஜகவின் 'C' டீம் தான் விஜயின் தவெக.. திமுக அமைச்சர் பரபரப்பு பேச்சு.!