அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
டயாபடிக் நோயாளிகளே.. பூனை வளர்க்கிறிர்களா.?! உயிரை எடுத்த வளர்ப்பு பூனை.. உஷார்.!
தனது செல்ல பூனையால் ஒரு நபர் உயிரிழந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆசையாக வளர்த்த பூனை :
ரஷ்ய நாட்டில் 55 வயதான டிமிட்ரி யுகின் என்ற நபர் ஆசையாக ஸ்டியோப்கா என்ற ஒரு பூனையை வளர்த்து வந்துள்ளார். அந்தப் பூனை திடீரென காணாமல் போயுள்ளது. அதன் பின், யுகினுக்கு அந்த பூனை மீண்டும் கிடைத்ததில் அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்துள்ளார். கடந்த நவம்பர் 22 அன்றுதான் அந்த கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. தனது வளர்ப்பு பூனையால் அவர் தாக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: திடீரென தோன்றிய பறக்கும் வெளிச்சம்.. ஏலியன் விமானமா..?! மக்கள் அதிர்ச்சி.!
நீரிழிவால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட யுகின் :
இந்த சம்பவத்தின் போது யுகினின் மனைவி வீட்டில் இல்லை. 55 வயதான அவருக்கு நீரிழிவு நோய் உள்ளிட்ட பல்வேறு உடல்நல பிரச்சனைகள் இருந்துள்ளது. இதனால் பூனையின் தாக்குதலின் போது அவருக்கு ரத்த இழப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு ரத்தம் உறைதல் குறைவாக இருந்துள்ளது. எனவே அந்தப் பூனை ஏற்படுத்திய சிறிய காயம் அவர் உயிரை எடுக்கும் அளவிற்கு மோசமானதாக மாறியுள்ளது.
நிற்காமல் கொட்டிய ரத்தம் :
நீரிழிவு நோய் உள்ளிட்ட பல உடல்நல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்த யுகினின் உடலில் இரத்தம் உறைதல் குறைவாக இருந்ததால், பூனை ஏற்படுத்திய சிறிய காயம் பெரிய பிரச்சனையாக மாறியது. முதலில் யுகின் இதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால் நிற்காமல் ரத்தம் கொட்டிக்கொண்டே இருந்ததால் தீவிரத்தை உணர்ந்த அவர் மருத்துவ உதவி குழுவை அழைத்துள்ளார்.
அமைதியான பூனை ஸ்டியோப்கா :
அவரது துரதிஷ்டம் அந்த குழு வருவதற்குள் அவர் உயிரிழந்து விட்டார். அவரது மரணத்திற்கான சரியான காரணங்களை தடவியல் நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். இந்த சம்பவம் அவரின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி அவரின் மனைவி ஸ்டியோப்கா மிகவும் அமைதியான பூனை என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இந்திய அரசுத்துறை அதிகாரிகளின் செல்போன் உரையாடல் ஒட்டுக்கேட்பு; கனடா மீது இந்தியா குற்றச்சாட்டு.!