திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பிரசவ வலியில் துடித்த மனைவி; பதற்றத்தில் மனைவியை மறந்த கணவர்.. சிசிடிவியில் அம்பலமான சம்பவம்.!
கணவர் கர்ப்பிணி மனைவியை மறந்து கார் ஒட்டிச் சென்றார்.
திருமணமான தம்பதிகள் தங்களின் அன்புக்கு அடையாளமாக எதிர்கால சந்ததியை உருவாக்குகிறார்கள். இந்த உருவாக்கம் என்பது பெண்ணின் உயிருக்கே மறுபிறவியை ஏற்படுத்தும் செயல்களில் ஒன்றும் ஆகும். ஒவ்வொரு பெண்ணும் பருவமடைந்த பின்னர், தனக்கான துணையை தேர்ந்தெடுத்து, அதனைத்தொடர்ந்து அவருடன் ஊடலில் கூடி ஓர் உயிரை இருவரும் சேர்ந்து உருவாக்குகிறார்கள்.
இதையும் படிங்க: நிலக்கரி சுரங்கத்தில் துப்பாக்கிசூடு; 20 பேர் கொடூர கொலை.. பாகிஸ்தானில் சோகம்.!
நமது ஊர்களில் பெண்ணின் திருமணத்தில் தொடங்கி, கர்ப்பம் உறுதி செய்யப்பட்டதில் இருந்து பெற்றோர், மாமனார்-மாமியார், கணவர் அரவணைப்பு என்பது பெண்களுக்கு அதிகம் இருக்கும். ஒருசில இடத்தில் அவை கிடைக்காது. எனினும், பெண்ணின் கணவர் தனது மனைவியை கர்ப்பகாலத்தில் குழந்தை போல கவனித்து வருகின்றனர்.
மனைவியை மறந்த கணவர்
இதனிடையே, சீனாவில் எடுக்கப்பட்டதாக தெரியவரும் வீடியோ ஒன்றில், இளம் கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவ வலியால் கணவரை அழைக்கிறார். கணவர் மனைவியின் உடமைகள் அடங்கிய கைப்பையை விரைந்து வந்து எடுத்து காரின் பின்பக்கத்தில் வைக்கிறார். அவசரத்தில் அவர் செயல்பட்ட நிலையில், மனைவி காருக்கு பின்புறம் இருந்தார்.
A man trying to get his wife, who is in labor, to the hospital panicked while loading their belongings into the trunk and forgot his wife, setting off alone. 🤣🤣 pic.twitter.com/tX7wwRWtl1
— Figen (@TheFigen_) October 10, 2024
தான் பெட்டிகளை காரின் பின்புறம் வைத்ததும், மனைவி காருக்குள் ஏறி இருப்பார் என்று, அவசரத்தில் தலைகால் புரியாமல் மனைவியை காரில் ஏற்றிக்கொள்ளாமலேயே விரைந்து அங்கிருந்து காரை அவசரமாக எடுத்துச் சென்றார். இந்த சம்பவம் எங்கு? என்பது நடைபெற்றது என்ற விபரம் இல்லை. எனினும் கணவரின் செயல்கள் பலரையும் ஈர்த்துள்ளது.
பிரசவத்திற்கு மனைவி வலியால் துடிக்கும்போது கணவருக்கு பதற்றம் தொற்றிக்கொள்ளும் எனினும், மனைவியையே மறந்து செல்லும் சம்பவம் நடந்துள்ளது.
இதையும் படிங்க: புளோரிடா மாகாணத்தை புரட்டியெடுத்த மில்டன் புயல்; பதறவைக்கும் காட்சிகள்.!