மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உக்ரைன் ரஷியா போரை நிறுத்தும் சக்தி பிரதமர் நரேந்திர மோடியே - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி.!
அமெரிக்கா - இங்கிலாந்து தலைமையிலான நேட்டோ படையில் இணையும் உக்ரைன் நாட்டின் முடிவை எதிர்த்து, அந்நாட்டின் மீது ரஷியா பிராந்திய பாதுகாப்பு கருதி போர்தொடுத்து சென்றுள்ளது. சர்வதேச விதிகளை மீறி செயல்பட்ட ரஷியாவின் மீது தற்போது பல்வேறு பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளது எனினும், அந்நாட்டின் கச்சா எண்ணெய், கியாஸ் உட்பட பிற விஷயங்களின் ஏற்றுமதி காரணமாக பெரிய அளவிலான தாக்கம் ஏற்படாமல் தப்பித்துக்கொண்டது.
உக்ரைன் - ரஷியா போர்
கிட்டத்தட்ட 2 ஆண்டுகளை கடந்து நடந்து வரும் போரில் இருதரப்பிலும் இராணுவ, பொருளாதார, மக்கள் இழப்புகள் நடந்து வருகிறது. அவ்வப்போது உக்ரைன் நாட்டில் உள்ள பல்வேறு நகரங்கள் மீது ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தப்படுகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளிடம் இருந்து பெறப்படும் இராணுவத்தை வைத்துக்கொண்டு உக்ரைன் போரில் பதில் தாக்குதல் நடத்துகிறது. தற்போது வரை பிற எந்த நாடுகளும் நேரடியாக போர்க்களத்திற்கு வரவில்லை.
இதையும் படிங்க: ரீல்ஸ் வீடியோ மோகத்தால் சோகம்; சிறுவன் மீது மோதிய இரயில்.. பதறவைக்கும் வீடியோ.!
இந்தியா நடுநிலை
இதனிடையே, போரின் தொடக்கத்தில் இருந்து உக்ரைன் - ரஷியா போரை பேச்சுவார்த்தையில் முடித்துக்கொள்ள இந்தியா அறிவுறுத்தி வருகிறது. ரஷியாவும் - இந்தியாவும் ராஜாங்கரீதியாக பல ஆண்டுகளாக நட்புறவில் நீடித்து வருவதால், ஐநா மன்றத்தில் ரஷ்யாவுக்கு எதிரான வாக்கெடுப்பின் போது இந்தியா அங்கு இருக்காது. பேச்சுவார்த்தையில் பிரச்சனையை முடித்துக்கொள்ள இந்தியா தரப்பில் அறிவுறுத்தப்டுகிறது. போர் தொடங்கிய நாட்களில் இருந்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே போரை முடிவுக்கு கொண்டு வர இயலும் என உக்ரைன் நம்பிக்கை தெரிவித்து வருகிறது.
அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை
இந்நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் உக்ரைன் - ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வர முடியும். பேச்சுவார்த்தை மூலமாக இந்த பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும். போரின் முடிவை கொண்டுவர பிரதமர் மோடிக்கு சக்தி, அதிகாரம் உள்ளது" என தெரிவித்தார். அமெரிக்காவில் நவ.5 ல் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதன் முடிவைப்பொறுத்தே உக்ரைனுக்கு எதிர்காலத்தில் இராணுவ உதவியும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மணப்பெண்ணுக்கு குடும்பத்தினர் முன்னிலையில் பளார் விட்ட மணமகன்.. வாக்குவாதம் மோதலில் முடிந்தது.!